தலை தப்பியது.. கொஞ்ச நேரத்துல வியர்க்க வச்சிட்டாங்களே! வெற்றியை நோக்கி மத்திய அமைச்சர் தோமர்!

Subscribe to Oneindia Tamil

போபால்: மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், வெற்றி பெற போராடி வந்த நிலையில், தற்போது பெரிய வித்தியாசத்தில் முன்னேறியுள்ளார். முன்னதாக, மத்திய பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையிலும், மத்திய அமைச்சரின் பின்னடைவு பாஜகவுக்கு அதிர்ச்சி கொடுத்தது.

மீண்டும் பாஜக ஆட்சி மத்திய பிரதேசத்தில் அமைய உள்ளதாகத் தெரிகிறது. தற்போதைய நிலவரப்படி பாஜக 162 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 66 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தை ஆண்டு வரும் பாஜக, மீண்டும் தங்கள் வெற்றிக்கொடியை ம.பியில் நாட்டியுள்ளது.

BJP Union minister Narendra singh Tomar trailing behind congress in madhya pradesh

மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், ம.பி மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் உள்ளிட்ட 2,533 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மத்திய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர், பிரஹலாத் படேல், ஃபகன் சிங் குலாஸ்தே உட்பட 7 எம்.பிக்களை தேர்தல் களத்தில் வேட்பாளர்களாக இறக்கியது பாஜக.

பாஜக எடுத்த ரிஸ்க்: இதுவரை எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், 3 மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட 7 எம்.பி.க்களை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட வைத்தது பாஜக. மேலும், தேசிய அளவிலான மூத்த தலைவர்கள் 11 பேருக்கு சீட் கொடுத்தது பாஜக. மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், இணை அமைச்சர்கள் பிரகலாத் சிங் படேல், பக்கன் சிங் குலாஸ்தே உள்ளிட்ட 7 எம்.பி.க்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டனர்.

திமானி தொகுதியில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் போட்டியிட்டார். நரேந்திர சிங் தோமர் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். கடந்த இடைத்தேர்தலில் பாஜக திமானி தொகுதியை இழந்தது. இங்கு காங்கிரஸின் தற்போதைய எம்.எல்.ஏ.வும் தோமர்தான். அவர் பெயர் ரவீந்தர் சிங் தோமர். திமானியில் மொத்தம் 2,01,517 வாக்காளர்கள் உள்ளனர். இதில் தோமர் சமூகத்தின் வாக்குகள் சுமார் 65,000 இருக்கும் எனக் கூறப்படுகிறது.

அதிர்ந்து போன தோமர்: இந்நிலையில், திமானி தொகுதியில் பாஜகவின் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பின்னடைவைச் சந்தித்தார். சிட்டிங் எம்.எல்.ஏவான காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர சிங் தோமரும் பின்னடைவைச் சந்தித்தார். பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பல்வீர் சிங் தந்தோதியா அதிக வாக்குகள் பெற்று முன்னணி பெற்றார்.

மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் முன்னிலை வகித்து வந்த நிலையில், பகுஜன் சமாஜ் வேட்பாளர் அவரை சற்று முந்தியுள்ளார். நிலவரம் மாறி மாறி வருகிறது. 7 சுற்றுகள் முடிவில், 1,677 வாக்குகள் வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்தார் நரேந்திர சிங் தோமர். மத்திய அமைச்சர் தோல்வி முகம் கண்டிருப்பது பாஜக மேலிடத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மீண்டும் முன்னிலை: இந்நிலையில், தற்போது சுமார் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர். நரேந்திர சிங் தோமரை தண்ணீர் குடிக்க வைத்த பல்வீர் சிங் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமரின் மகன் தேவேந்திர சிங் தோமர் வீடியோ காலில் பேசுவது குறித்த வீடியோ சமீபத்தில் வெளியானது. மூன்று முக்கிய பணிகளை முடிக்க, 139 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் குறிப்பிடப்பட்டது. மேலும், மற்றொரு முக்கிய பணியை முடிக்க, 500 கோடி ரூபாய்க்கு தேவேந்திர சிங் தோமர் பேரம் பேசியதாக அதில் கூறப்பட்டது.

இதையடுத்து, இந்த விஷயத்தை தீவிரமாக கையில் எடுத்த காங்கிரஸ் கட்சி, ம.பியில் ஊழல் ஆட்சி நடப்பதாகவும், பாஜக ஆட்சியில் கமிஷன் தலைவிரித்து ஆடுவதாகவும் தேர்தல் பிரச்சாரங்களில் குற்றம் சாட்டியது. ஆனால், இது போலியான வீடியோ என்று மறுத்தது. இந்நிலையில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+