அஸ்ஸாம்: ஆட்சியை தக்க வைக்கும் பாஜக 73 முதல் 81 இடங்கள்; காங்.36- 44 இடங்கள்; ஏபிபி- சிவோட்டர் சர்வே
Subscribe to Oneindia Tamil
குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்றும் அக்கட்சியின் கூட்டணிக்கு 73 முதல் 81 இடங்கள் கிடைக்கும் என்கிறது ஏபிபி-சிவோட்டர் சர்வே.
தமிழகம், புதுவை, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் மாநில சட்டசபை தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது குறித்து ஏபிபி- சிவோட்டர் சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்கிறது இந்த சர்வே.

கேரளாவில் இடதுசாரிகள் ஆட்சியைத் தக்க வைப்பார்கள் என்றும் அஸ்ஸாமில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும் என்கிறது ஏபிபி சர்வே.
அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் சர்வே முடிவுகள்:
- பாஜக கூட்டணி 73 முதல் 81 இடங்கள்
- காங்கிரஸ் கூட்டணி 36 முதல் 44 இடங்கள்
- ஏ.ஐ.டி.யூ.எப் 5 முதல் 9 இடங்கள்
- இதர கட்சிகள் 0 முதல் 4 இடங்களில் வெல்லும் என்கிறது இக்கருத்து கணிப்பு முடிவுகள்.












Click it and Unblock the Notifications