சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் - உயிரிழந்த 7 சி.ஆர்.பி.எப். வீரர்களில் தமிழர் ஒருவரும் பலி
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் தண்டேவடா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 7 சி.ஆர்.பி.எப். வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் ஒருவரும் பலியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தண்டேவடா வனப்பகுதி மாவோயிஸ்டுகளின் கை ஓங்கியுள்ள பகுதி. இப்பகுதியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமிட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்டேவடாவின் மலெவரா பகுதியில் சி.ஆர்.பி.எப். வாகனம் சென்றபோது மறைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர் மாவோயிஸ்டுகள். இதில் அந்த வாகனத்தில் இருந்த 7 வீரர்களும் பலியாகினர்.
இது குறித்து தண்டேவடா எஸ்.பி. கே காஷ்யப் கூறுகையில், சி.ஆர்.பி.எப்.-ன் 230வது பட்டாலியனைச் சேர்ந்த வீரர்களே வாகனத்தில் சென்றனர். அவர்கள் அனைவருமே இத்தாக்குதலில் பலியாகிவிட்டனர் என்றார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மாவோயிஸ்டுகளைத் தேடும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பலியான வீரர்களின் உடல்கள் அடையளம் காணப்பட்டு வருகிறது. இதில் சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த விஜயராஜ் என்ற வீரரும் பலியாகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications