திருப்பதி: ரூ.300 விரைவு தரிசன டிக்கெட் ஆன்லைன் விற்பனை தொடங்கியது
திருப்பதி: திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் இன்று முதல் ஆன்லைனில் ரூ. 300-க்கு டிக்கெட் எடுத்து விரைவு தரிசனம் செய்யும் முறையை தேவஸ்தானம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய திருப்பதி தேவஸ்தான உயர் நிர்வாக அதிகாரி எம்.ஜி கோபால், ஆன்லைனில் 300 ரூபாய் சிறப்பு டிக்கெட் எடுக்கும் பக்தர்கள் டிக்கெட் எடுத்த 7 நாட்கள் கழித்து திருப்பதி வந்து சாமி தரிசனம் செய்யலாம். இன்று புக்கிங் செய்யப்பட்ட டிக்கெட் மூலம் 27ம் தேதி தரிசனம் செய்யலாம்

குறிப்பிட்ட நேரத்தில் இருந்து 2 மணி நேரத்துக்கு முன்பாக திருப்பதி கோவிலுக்கு வந்தால் போதுமானது. இந்த புதிய முறையில் முதல் கட்டமாக 5000 டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளோம்.
முன்பதிவு செய்த டிக்கெட்டை இரு பிரதி ஜெராக்ஸ் எடுத்து வரவேண்டும். ஒரிஜினல் அடையாள அட்டையை கண்டிப்பாக எடுத்து கொண்டு வரவேண்டும்.
12 வயதுக்கு உட்பட்டவர்களின் வயது சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை மாற்றவோ, ரத்து செய்து கொள்ளவோ முடியாது. படிப்படியாக தினமும் 18,000 டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
மேலும் ரூ. 50 கட்டண டிக்கெட்டுகள் தினமும் 7000 வரை ஆன்லைனில் வழங்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார். டிக்கெட்டுகளை www.tirumala.org என்ற இணையதளம் மூலம் பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications