இருநாட்டு வர்த்தக உறவுகளை வலுப்படுத்த... விரைவில், பாக். சிம்கார்டுகளுக்கு இந்தியாவில் அனுமதி?
டெல்லி: இருநாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட சிம்கார்டுகளை இந்தியாவில் பயன்படுத்த விரைவில் அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக பாகிஸ்தானில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தங்களின் அந்நாட்டு சிம்கார்டுகளை இங்கு பயன்படுத்தத் தடை அமலில் உள்ளது. அதேபோல், இந்திய சிம்கார்டுகளை பாகிஸ்தானில் பயன் படுத்தவும் தடை உள்ளது.
இந்நிலையில், வர்த்தகத் துறை செயலாளர் ராஜீவ் கெர் உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

பரஸ்பர உறவு...
பாகிஸ்தானில் இருந்து விசா மூலம் இந்தியாவுக்கு வருபவர்கள் தீவிரவாதிகள் அல்ல. எனவே அவர்களுக்கு பாகிஸ்தான் சிம்களை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலமே இருநாடுகளுடன் பரஸ்பர உறவு உருவாகும்.

டெலிகாம் டிராபிக்...
பாகிஸ்தான் சிம்கார்டுகளுக்கு அனுமதி அளிப்பதால் இந்தியா டெலிகாம் டிராபிக்கை நன்றாக மானிட்டர் செய்ய முடியும். இதன் மூலம் பாகிஸ்தானில் இருந்து வரும் ஒருவர் ஸ்கைப் போன்ற வசதிகளையும் இங்கே பயன்படுத்த முடியும்.

ஏன் இந்த வித்தியாசம்...
பாதுகாப்பு காரணங்களை மட்டுமே கருத்தில் கொண்டால் துபாயில் இருந்து வரும் ஒருவர் அங்குள்ள சிம் கார்டை கொண்டு வருகிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த சிம்கார்டு இங்கே வேலை செய்கிறது. ஆனால், பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்படும் சிம்கார்டுகளுக்கு மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது ஏன்?

இந்திய சிம்கார்டுகள்...
பாகிஸ்தானில் இருந்து வரும் பிஸினஸ்மேன்களுக்கு இந்தியாவில் 10 நகரங்களுக்கு செல்ல விசா வழங்கப்பட்டாலும், செல்போனில் பேச இந்திய சிம்கார்டுகளையே சார்ந்திருக்க வேண்டி உள்ளது. அதே போல் பாகிஸ்தானிலும் இந்திய சிம்கார்டுகள் தடை செய்யப்பட்டுள்ளது' என இவ்வாறு அக்கடிதத்தில் அவர் எழுதியுள்ளார்.

வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு...
வரும் 24-ஆம் தேதி மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் பாகிஸ்தான் வர்த்தகத்துறை அமைச்சர் குர்ராம் தாத்கிர் கான் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இந்நிலையில், ராஜீவ் கெர்-ன் இக்கடிதம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப் படுகிறது.

முதல்முறை...
மத்தியில் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு இருநாடுகளின் வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications