For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எல்லையில் ஊடுருவல்: இந்தியா-சீனா செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து

By Mathi
Google Oneindia Tamil News

டெல்லி: எல்லையில் தொடர்ந்தும் சீனா ராணுவ வீரர்கள் ஊடுருவி வருவதால் டெல்லியில் வரும் 24-ம் தேதி நடைபெறவிருந்த இந்திய-சீன செய்தியாளர்கள் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது.

சீன அதிபர் ஜி ஜின்பிங் சமீபத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்திருந்தார். அப்போது இருதரப்புக்கும் இடையே ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பாக ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.

தொடர் ஊடுருவல்

தொடர் ஊடுருவல்

எல்லைப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று சீன அதிபர் தெரிவித்திருந்தார். அதே சமயம் இந்திய எல்லையில் உள்ள சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியது. அங்கு சாலை அமைப்பதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மீண்டும் ஊடுருவல்

மீண்டும் ஊடுருவல்

இந்திய ராணுவத்தின் எதிர்ப்பை அடுத்து அங்கிருந்து சீன ராணுவ வீரர்கள் வெளியேறினர். ஆனால், மீண்டும் கடந்த சனிக்கிழமை சுமர் பகுதியில் சீன ராணுவம் ஊடுருவியுள்ளது. அவர்களை வெளியேறுமாறு இந்திய ராணுவம் வலியுறுத்தி வருகிறது.

பேச்சுவார்த்தை

பேச்சுவார்த்தை

எல்லையில் சாலை அமைக்கும் பணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் ராணுவ வீரர்களை சீன அரசு நிறுத்திவைத்துள்ளது. இந்நிலையில், வரும் 24-ந் தேதி டெல்லியில் இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த செய்தியாளர்கள் சந்தித்துப் பேசுவதற்கான கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ரத்து

ரத்து

இதில் பங்கேற்க வரும் சீனாவின் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி செய்தி சேனல்களின் ஆசிரியர்களுக்கு இந்திய அரசு ஏற்கெனவே அனுமதி அளித்திருந்தது. ஆனால், திடீரென அந்த அனுமதியை இந்திய அரசு நேற்று ரத்து செய்துள்ளது.

ஏன் ரத்து?

ஏன் ரத்து?

சீன ராணுவத்தின் ஊடுருவல் நடைபெற்றுள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவது சரியாக இருக்காது என்பதால் இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

English summary
Amidst the standoff in Chumar area of Ladakh, India on Monday decided to withdraw clearances for Chinese editors who were scheduled to arrive here this week for a media exchange with Indian journalists.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X