மு.க. ஸ்டாலின்: "தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி" - வேறென்ன புதிய அறிவிப்புகள்?
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல் கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று தமது ஆட்சியின் சாதனைகளையும் எதிர்கால திட்டங்களையும் அறிவித்தார் மு.க. ஸ்டாலின் அதன் முக்கிய அம்சங்களை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

புதிய திட்டங்கள்
- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக ஊராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து இத்திட்டம் தொடங்கப்பட்டு, படிப்படியாக விரிவுபடுத்தப்படும். அனைத்து பள்ளி வேலை நாள்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். முல்ற்கட்டமாக 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 25 மாநகராட்சி மற்றும் அரசு மேல் நிலை பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். கலை, இலக்கியம், இசை போன்றவற்றை கற்பதற்கான கட்டமைப்பு உருவாக்கப்படும்.
மு.க. ஸ்டாலினின் ஓராண்டு திமுக ஆட்சி சாதனையா, சாதாரணமா? விரிவான அலசல்
கிழக்கு கடற்கரை சாலைக்கு கருணாநிதியின் பெயர்: குழப்பம்தான் மிஞ்சுமா?
தென்னிந்திய முதல்வர்கள் குழு: மு.க.ஸ்டாலினின் முயற்சியும் 3 கேள்வி பதில்களும்
- நகர்ப்புற மருத்துவமனைகளில் காலை 8 -11 மணி வரையிலும் மாலை 4-8 மணி வரையிலும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதி வழங்கப்படும். 2030க்குள் அனைவருக்கு நல்வாழ்வு என்பதை தமிழ்நாடு எட்டும் வகையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழ்நாட்டில் தலைமை மருத்துவமனைகளில் நெருக்கடியை குறைக்கும் நோக்கில் நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும். முதற்கட்டமாக சென்னை மாநகராட்சி உட்பட 21 மாநகராட்சிப் பகுதிகளிலும் 63 நகராட்சிப் பகுதிகளிலும் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
- தமிழ்நாடு முழுவதும் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்படும். மருத்துவ வசதி தேவைப்படும் குழந்தைகளுக்கு மருத்துவ வசதியும், ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தும் வழங்கப்படும்.
- "உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம்" தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும். நீண்டகாலமாக நடைமுறைப்படுத்தப்படாத திட்டங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் பரிந்துரைகளின் பேரில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ. 1,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.
https://twitter.com/bbctamil/status/1522790250908692481
வேகத்தடைக்கு என்ன காரணம்?
- இந்த ஓராண்டு காலத்தில் செய்யக்கூடியதைவிட அதிகமாக செய்துவிட்டோம் என என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். இன்னும் வேகமாக செல்ல முடியாத அளவுக்கு தடையாக இருப்பவை நிதி நிலை நெருக்கடியும் மத்திய அரசின் சில நிலைப்பாடுகளும்தான்.
- மற்றவர்களின் பலத்தை நம்பி அரசியல் செய்பவனல்ல நான். என்னுடைய பலத்தை நம்பியே அரசியல் செய்கிறேன். எனது பலம் எனது இலக்கில் இருக்கிறது. எனது இலக்கை எப்படியும் அடைவேன். என்னுடைய இலக்கிற்கு திராவிட மாடல் என்று பெயர்.
பேருந்தில் பயணம் செய்த முதல்வர்
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு புறப்படும் முன்பாக சென்னை கோபாலபுரத்தில் உள்ள தமது தாயார் தயாளு அம்மாளை சந்தித்து ஆசி பெற்றார் மு.க. ஸ்டாலின். பிறகு அங்கிருந்து தலைமைச் செயலகம் செல்வதற்காக மெரினா கடற்கரை நோக்கி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாகச் சென்றபோது திடீரென வாகனத்தை நிறுத்துமாறு கூறிய முதலமைச்சர், அந்த வழியாக வந்த ஒரு பேருந்தில் ஏறினார். அதில் இருந்த பயணிகளிடம் பேசிய அவர், அவர்களின் கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.
பிறகு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சதுக்கத்தில் இறங்கிய ஸ்டாலின், அங்குள்ள அண்ணாதுரை மற்றும் கருணாநிதியின் நினைவிடங்களுக்கு சென்று மலரஞ்சலி செலுத்தினார். அவர் பேருந்தில் பயணம் செய்த காணொளி மற்றும் படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications