இதுதான் காதலில் விழுவதோ..வெட்டிங் ஷூட்டின் போது கீழே விழுந்த மணமக்கள்..கலாய்த்து தள்ளும் நெட்டிசன்ஸ்
ராஜஸ்தானில் ப்ரீவெட்டிங் ஷூட்டின் போது மணமக்களை வித்தியாசமான கோணத்தில் புகைப்படம் எடுக்க போட்டோகிராபர் முயற்சித்த போது, மணமக்கள் தவறி கீழே விழுந்த காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றன. நெட்டிசன்கள் பலரும் ஜாலியாக இந்த வீடியோவுக்கு தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஒவ்வொருவரின் வாழக்கையிலும் திருமணம் என்பது மறக்க முடியாத அத்தியாயம்.
சொந்த பந்தங்களை எல்லாம் திரட்டி திருமணத்தை விமர்சியாக கொண்டாட விரும்பும் மணமக்கள், தங்கள் இல்லற வாழ்வில் இணையும் பந்தத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் புகைப்படங்களாகவும் வீடியோக்களாகவும் எடுத்து ஆவணப்படுத்திக் கொள்வதுண்டு.

திருமண போட்டோக்கள்
இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பத்திரமாக வைத்துக்கொண்டு தங்கள் உறவினர்களிடம் காட்டி மகிழ்ச்சி அடைகின்றனர். தங்கள் பேரக்குழந்தைகளிடம் கூட காட்டுவதற்காக அதை பத்திரப்படுத்தி வைத்துகொள்கின்றனர். திருமணம் என்ற அந்த மறக்க முடியாத தருணத்தை தற்போது வெட்டிங் போட்டோஷூட், ப்ரி வெட்டிங் போட்டோஷூட் என இப்போதுள்ள தம்பதிகள் எடுத்து வைத்துக்கொள்ளும் கலாசாரம் அதிகரித்துள்ளது.

மணமக்களை விரட்டியடித்த யானை
இத்தகைய வெட்டிங் போட்டோஷூட்கள் பலவும் அவுட்டோர்களில் நடக்கின்றன. இதனால், சுவாரசியமான சில சம்பவங்களும் அடிக்கடி நடந்து தம்பதிகளின் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு அமைந்து விடுகிறது. சமீபத்தில் கூட கேரளாவில் போட்டோ ஷூட் எடுத்துக் கொண்டு இருந்த போது யானை ஒன்று தென்னை ஓலையை வீசி மணமக்களை விரட்டியடித்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அதிர்ச்சி ஒருபக்கம் என்றாலும் ரசிக்கும் படியாகவும் இந்தக் காட்சிகள் அமைந்து இருந்தன.

ப்ரீவெட்டிங் ஷூட்
அதேபோல் கடந்த வாரம் கூட்ட போட்டோஷூட் ஒன்றின் போது மணமக்களுக்கு இடையூறாக குரங்கு தனது குட்டியுடன் புகுந்து போட்டோஷூட்டில் தன்னையும் இணைத்துக்கொண்டது. இது நெட்டிசன்களை வெகுவாக ரசிக்க வைக்கும் வகையில் இருந்தது. இப்படி ப்ரீவெட்டிங் ஷூட்டில் அவ்வப்போது நடைபெறும் சில சுவாரசிய நிகழ்வுகள் மணமக்களை தங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணமாக நினைக்கும் அளவுக்கு ஏதாவது ஒரு சம்பவம் நடைபெற்று ரசிக்க வைத்து விடுகிறது.

சினிமா காட்சியில் இடம் பெறுவது போல
அந்த வகையில் ராஜஸ்தானில் கடந்த 15 ஆம் தேதி நடைபெற்ற திருமண பிரிவெட்டிங் ஷூட்டிங் நடைபெற்றது. இதில் மணமக்களை பல்வேறு கோணங்களில் போட்டோகிராபர் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது பெண்ணின் ஒரு கையை பிடித்து சுற்றவைத்து தனக்கு நெருக்கமாக அழைத்து சினிமா காட்சியில் இடம் பெறுவது போன்ற ஒரு அழகான புகைப்படத்தை எடுக்க நினைத்த போட்டோகிராபர் அதன்படி செய்யுமாறு மணமக்களை வலியுறுத்தினார்.

இணையத்தில் வேகமாக பரவும் வீடியோ
மணமக்களும் இதை செய்ய நினைக்கும் போதுதான் தவறுதலாக கீழே விழுந்துவிட்டனர். இதைப் பார்த்த அங்கிருந்த மொத்த நபர்களுக்கும் சிரிக்கத் தொடங்கிவிட்டனர். மணமக்களுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்பதால் இது அங்கு இருந்தவர்களை வெகுவாக ரசிக்க வைத்துவிட்டது. இந்தக் காட்சிகள்தான் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை நகைசுவையாக பதிவிட்டு வருகின்றனர்.

புகைப்படக்காரரே இதற்கு காரணம்
நெட்டிசன் ஒருவர் பதிவிடுகையில், உண்மையிலேயே இது தம்பதிக்கு இது மறக்க முடியாத வெட்டிங்ஷூட் தருணம் தான் என்று பதிவிட்டுள்ளார். அதேபோல், சில நெட்டிசன்கள் புகைப்படக்காரரின் அறிவுறுத்தலே இதற்கு காரணம் என்றும் விமர்சனம் செய்யும் வகையிலும் பதிவிட்டு இருக்கின்றனர். எது எப்படியோ.. மறக்க முடியாத பிரிவெட்டிங் ஷூட்டாகவே இது அமைந்துவிட்டதாக நெட்டிசன்கள் பலரும் கருத்துக்களை அள்ளி தெளித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications