மகளுக்கே அல்வா.. மருமகனையே மணமகனாக்கிய சப்னா! காதலுக்கு கண்ணில்லையாம்..மருமகன் ஜித்து ஜில்லாடியாமே!
லக்னோ: மகளுக்கு நிச்சயம் செய்த இளைஞருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகை பணத்துடன் தலைமறைவானதாக கூறப்பட்ட பெண் தற்போது உத்தர பிரதேச காவல் துறையிடம் சரணடைந்திருக்கிறார். தனது மகளுக்கு நிச்சயதார்த்தம் செய்த இளைஞரை தனக்கு பிடித்துள்ளதாகவும்,அவரை காதலிப்பதாகவும் அவருடன் தான் சேர்ந்து வாழ்வேன் எனக் கூறிய போலீசாரையே அதிர வைத்திருக்கிறார்.
எப்போது எந்த விஷயங்கள் திடீரென ட்ரெண்டிங் ஆகும் என்பது யாருக்குமே தெரியாது. பெரிய பெரிய ஆட்கள் நொடி பொழுதில் ட்ரோல் செய்யப்படுவதும், சாதாரண ஆட்கள் திடீரென இந்திய அளவில் பிரபலமாவது வழக்கம்தான்.
அப்படி ஒரு சர்ச்சையான செய்தி மூலம் இந்தியா முழுவதும் பேசு பொருளானவர் தான் சப்னா தேவி. உத்திரபிரதேச மாநிலம் அலிகாரை சேர்ந்த இவர் தனது மகளுக்கு ராகுல் என்ற வாலிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்தார்.

பெண் பார்க்கும் படலம் நிச்சயதார்த்தம் எல்லாம் முடிவடைந்த நிலையில் திருமணத்திற்கு ஒரு வாரமே இருந்தபோது சப்னா தேவி மாயமானார். அவர் மாயமான ஆறாம் தேதியே ராகுலும் மாயமானார். விசாரித்த போது தான் வீட்டிலிருந்த மூன்று லட்சம் ரூபாய் பணம் மற்றும் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் சப்னாதேவி தனது மகளுக்கு நிச்சயத்தை இளைஞருடன் ஓடியது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சப்னாதேவியின் கணவரான ஜிதேந்திர குமார் இது குறித்து அலிகார் காவல் துறையில் புகார் அளித்தார். தனது தனது மருமகனுடன் தனது மனைவி வீட்டில் இருந்த நகை பணத்துடன் மாயமாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து தருமாறு கூறியிருந்தார். இந்த நிலையில் நேபாளம் எல்லையில் பீகாரின் சீதாமருங்கி பகுதியில் இருவரும் தங்கி இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் அவர்களை பிடிக்க சென்ற நிலையில் அவர்களாகவே உத்தரப் பிரதேசம் வந்து காவல் நிலையத்தில் சரண் அடைந்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தனது மருமகன் ராகுலுடன் காதல் ஏற்பட்டதாகவும் திருமணத்திற்கு முன்பு இருவரும் அதிக நேரம் தொலைபேசியில் பேசி வந்த நிலையில் தனது மகளுக்கு பார்த்த நபருடன் தனக்கு காதல் ஏற்படும் என யோசிக்கவில்லை என கூறி இருக்கிறார். எனது மருமகன் நகைகளை எடுத்துச் செல்லவில்லை. வீட்டில் இருந்து செல்போனையும் 200 ரூபாய் பணத்துடன் மட்டுமே தான் சென்றதாக கூறியுள்ளார்.
மேலும் குடிகாரரான கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து தன்னிடம் தகராறு செய்தாளராகவும், தனது மகளும் தன்னை திட்டிக் கொண்டே இருந்த நிலையில் தொலைபேசியில் பேசிய ராகுல்தான் ஆறுதலாக இருந்தார். என்ன நடந்தாலும் பரவாயில்லை இனிமேல் நாம் ஒன்றாக வாழ்வோம் என கூறி வீட்டை விட்டு சென்றதாகவும் இனி அவர்தான் தனது வாழ்க்கையில் எனக் கூறியிருக்கிறார். மேலும் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தங்கள் புகைப்படத்துடன் செய்திகள் வெளியான நிலையில் வெளியே தங்க முடியாது சொந்த ஊருக்கே சென்று விடுவோம் என்று வந்ததாகவும் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில் தான் ராகுல் பற்றி மற்றொரு அதிர்ச்சி தரும் தகவல் வெளியானது. கடந்த ஆண்டு ராகுல் இதேபோல மற்றொரு பெண்ணுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்று இரண்டு மாதம் கழித்து திரும்பி வந்திருக்கிறார். ஆனால் அந்த பெண்ணின் வீட்டார் புகார் அளிக்காத நிலையில், தனக்கு திருமணம் நிச்சயித்த மாமியாருடன் எஸ்கேப் ஆகி, தற்போது அவரையே மணமகளாக்கி இருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications