For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கட்சி உத்தரவை மீறி.. காங்.,க்கு ஓட்டளித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள்! பரபர ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்

Google Oneindia Tamil News

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா தேர்தலில் கட்சி உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். காங்கிரஸ் சார்பில் 3வது வேட்பாளரை வெற்றி பெற செய்யும் நோக்கத்தில் அவர்கள் ஓட்டளித்துள்ளனர்.

இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.

தமிழகம் உள்பட தமிழகம் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி ராஜ்யசபா எம்பிக்களாக தேர்வாகி உள்ளனர். ராஜஸ்தான், ஹரியானா, கர்நாடகம், மகாராஷ்டிரா மாநிலங்களில் 16 இடங்களுக்கு இன்று விறுவிறுப்பாக தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு துவங்கிய தேர்தல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது.

பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி பாஜகவை தோற்கடிப்பது தான் நோக்கமே! மகாராஷ்டிரா ராஜ்யசபா தேர்தலில் காங்.,க்கு ஆதரவளித்த ஓவைசி கட்சி

4 இடத்துக்கு 5 பேர் போட்டி

4 இடத்துக்கு 5 பேர் போட்டி

ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தமட்டில் 4 பேர் ராஜ்யசபாவுக்கு தேர்வாக உள்ளனர். மொத்தம் 200 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் ராஜ்யசபா வேட்பாளர் ஒருவருக்கு 41 பேரின் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சிக்கு 108 எம்எல்ஏக்கள் உள்ளதால் 2 பேரின் வெற்றி உறுதியாகி உள்ளது. ஆனால் காங்கிரஸ் சார்பில் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக் மற்றும் பிரமோத் திவாரி என மூவர் போட்டியில் உள்ளனர். பாஜகவுக்கு 71 எம்எல்ஏக்கள் உள்ள ஒரு வேட்பாளரின் வெற்றி உறுதியாகும். ஆனால் பாஜக கன்ஷியாம் திவாரி, சுபாஷ் சந்திரா ஆகியோரை களமிறக்கி உள்ளது.

ரெசார்ட்டில் எம்எல்ஏக்கள்

ரெசார்ட்டில் எம்எல்ஏக்கள்

இதனால் 4வது வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் களமிறங்கிய பிரமோத் திவாரியை வெற்றி பெற செய்ய அக்கட்சி முயன்று வரும் வேளையில் பாஜக சார்பில் சுபாஷ் சந்திராவை வாகைசூட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் 2 வேட்பாளர்களும் தங்கள் கட்சி வேட்பாளர்கள் தவிர பிற கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை கேட்டு வருகின்றனர். இதனால் முன்னெச்சரிக்கையாக காங்கிரஸ், பாஜக கட்சிகள் தங்கள் எம்எல்ஏக்களை ரெசார்ட்டுக்கு கொண்டு சென்றனர்.

பிற எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு?

பிற எம்எல்ஏக்களின் ஆதரவு யாருக்கு?

காங்கிரஸின் பிரமோத் திவாரி, பாஜகவின் சுபாஷ் சந்திராவின் வெற்றியை நிர்ணயிக்கும் சக்திகளாக அக்கட்சியில் உபரியாக உள்ள ஓட்டுக்கள் தவிர சுயேச்சையாக உள்ள 13 எம்எல்ஏக்கள், ஆர்எல்பி கட்சியின் 3 எம்எல்ஏக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிடிபி கட்சியின் தலா 2 எம்எல்ஏக்கள், ஆர்எல்டி கட்சியின் ஒரு எம்எல்ஏ என மொத்தம் 21 எம்எல்ஏக்களின் கையில் உள்ளது. மேலும் 6 பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து உள்ள நிலையில் இவர்களின் ஓட்டுரிமையை தடுக்கும் வகையிலான வழக்கை அவசர வழக்காக விசாரிக்க நீதமன்றம் மறுத்துவிட்டது. இதனால் இவர்களின் ஓட்டுக்களும் யாருக்கு கிடைக்கிறது என்பதில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு

காங்கிரசுக்கு பகுஜன் சமாஜ் ஆதரவு

இந்நிலையில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் எம்எல்ஏக்கள் பேரும் இன்று காலை ஓட்டுப்பதிவு துவங்கிய நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். மேலும் அவர்கள் சட்டசபைக்கு முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் வந்து காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளித்தனர். 2018 சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளராக வெற்றி பெற்று 2019ல் காங்கிரஸுடன் இணைந்த 6 எம்எல்ஏக்களும் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் பகவான் சிங் பாபா உத்தரவு பிறப்பித்துள்ளார். இருப்பினும் பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

English summary
In the Rajasthan state Rajya Sabha elections, Bahujan Samaj MLAs voted in favor of the Congress party in defiance of party orders. They are voting to win the 3rd candidate on behalf of the Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X