பாதுகாப்பு, காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீடு 49% ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கான வரம்பு 26%-ல் இருந்து 49% ஆக அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்..

நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்:

மக்கள் வேலை வாய்ப்பு தேடி நகரங்களுக்கு இடம்பெயர்வதை தவிர்க்கும் வகையில் 100 நவீன நகரங்கள் அமைக்க ரூ.7060 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீடானது 26%-ல் இருந்து 49% ஆக அதிகரிக்கப்படும்.

Budget 2014: FDI Limit in Defence, Insurance Hiked to 49%

பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்புக்காக 150 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

தமிழகம் உட்பட 2 மாநிலங்களில் சூரிய மின் உற்பத்திக்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

உரிமை கோரப்படாத வருங்கால வைப்பு நிதி (பி.எப்) பணத்தை ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்படும்.

வங்கிகளுக்கு வரும் 2018ம் ஆண்டுக்குள் ரூ.2.4 லட்சம் கோடி நிதி உதவி அளிக்கப்படும்.

அடுத்த 6 மாதத்தில் 9 விமான நிலையங்கள் தரம் உயர்த்தப்படும்.

கிராமப்புற மக்களின் வீட்டு வசதிக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். கிராமப்புற குடிநீர் வசதியை மேம்படுத்த 3,600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+