தமிழகம், கேரளா, கர்நாடகாவில் பதுங்கி இருக்கும் புர்த்வான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள்
டெல்லி: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு தோட்ட வேலை மற்றும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள் என்று தேசிய புலனாய்வுத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. முக்கிய குற்றவாளியான கௌசர் கூட வங்கதேசத்திற்கு செல்லவில்லை. அவரும் இந்தியாவில் தான் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் வெடிகுண்டுச் சம்பவத்தில் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்பினரின் திட்டங்கள் தகர்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அமைப்பைச் சேர்ந்த 6 ஆயிரம் வங்கதேசத்து நபர்கள் தென்னிந்தியாவுக்கு சென்று அங்கு தோட்ட வேலை, கட்டிட வேலை செய்து வருகிறார்களாம். அவர்கள் தாங்கள் அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்து வேலை வாங்கியுள்ளனர்.
அவர்களிடம் உரிய ஆவணங்கள் உள்ளதால் அவர்களை கண்டுபிடிப்பது எளிது அல்ல என்று தேசிய புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. ஜமாத்துல் முஜாஹிதீன் அமைப்புக்கு அல் உம்மா அமைப்பு ஆதரவு அளித்துள்ளதால் தீவிரவாதிகள் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் கூலி வேலை செய்யக்கூடும் என்று கூறப்படுகிறது. இதனால் உள்ளூர் போலீசாரை அணுகி அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து வந்தவர்களை கண்டறிய உதவி செய்யுமாறு தேசிய புலனாய்வுத் துறை கேட்க உள்ளது.
ஜமாத்துல் முஜாஹிதீன், அல் உம்மா அமைப்புகளுக்கு சிமி அமைப்புடன் பல ஆண்டுகளாக தொடர்பு உள்ளது. தென்னிந்தியாவுக்கு சென்றுள்ள தீவிரவாதிகள் பல ஆண்டுகள் பொறுமையாக இருந்து போலீசாரின் கெடுபிடி அடங்கிய பிறகு தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவர்கள் 2005ம் ஆண்டு தாக்குதல் நடத்திவிட்டு 6 ஆண்டுகள் பொறுமையாக காத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications