இடைத்தேர்தல்.. ராஜஸ்தானில் அசத்தும் காங்.. 4வது இடத்திற்கு பின் தங்கிய பாஜக.. பெரும் பின்னடைவு
ஜெய்ப்பூர்: பல்வேறு மாநில இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.
3 லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 29 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த தேர்தல் நடைபெற்றது.
இன்று காலையில் இருந்து இதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அசாமில் 5, மேற்குவங்கம் 4, மத்தியப் பிரதேசம் 3, ஹிமாச்சல் பிரதேசம் 3, மேகாலயா 3, பீகார் 2, கர்நாடகா 2, ராஜஸ்தான் 2 சட்டசபை தொகுதிகள் இடைத்தேர்தல் நடந்துள்ளது.

வேறு எங்கு?
அதேபோல் மிசோரம், நாகாலாந்து, தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் தலா 1 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. ராஜஸ்தானில் இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் காங்கிரஸ்தான் முன்னிலை வகிக்கிறது.

காங்கிரஸ்
ராஜஸ்தானில் வல்லப்நகர், தரியாவா ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது. இதில் இரண்டிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்கள். வல்லப்நகரில் காங்கிரஸ் வேட்பாளர் பிரீத்தி சாக்தாவத் இரண்டாம் இடத்தில் உள்ள ஆர்எல்பி வேட்பாளர் டாங்கியை விட 6,458 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகித்து வருகிறார்.

பாஜக
இன்னொரு பக்கம் தரியாவா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் நாகராஜ் 16000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார். இரண்டு தொகுதிகளிலும் பாஜக மிக மோசமான பின்னடைவை சந்தித்துள்ளது. இரண்டு தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் 4வது இடம் பிடித்து மோசமான தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறார்கள்.

வெற்றி
ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் அசோக் கெலாட் கடந்த 1 வருடமாக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அழுத்தங்களை எதிர்கொண்டு வந்தார். முக்கியமாக சச்சின் பைலட் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில்தான் இடைத்தேர்தல் வெற்றி ராஜஸ்தானில் அசோக் கெலாட் ஆட்சிக்கு கிடைத்த சர்டிபிகேட் போல பார்க்கப்படுகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications