மோடி அலை ஓய்ந்துவிட்டது: சிவசேனா தாக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கோரக்பூர் தொகுதியில் பாஜக தோல்வி முகம்..வீடியோ

  மும்பை: உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநில லோக்சபா இடைத் தேர்தல்களில் பாஜக தோல்விமுகத்தில் உள்ள நிலையில், நரேந்திர மோடியின் அலை நாட்டில் ஓய்ந்துவிட்டது என்று, அதன் முன்னாள் கூட்டணி கட்சியான சிவசேனா தெரிவித்துள்ளது.

  உத்தர பிரதேசத்தின் கோரக்பூர், பூல்பூர் மற்றும் பீகாரின் அரேரியா ஆகிய 3 லோக்சபா தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் கடந்த 11ம் தேதி நடந்தன. இந்த தொகுதிகளுக்கு இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

  Bypoll results prove Modi wave is over: Shiv Sena

  மூன்று தொகுதிகளிலுமே பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. உ.பி.யின் இரு தொகுதிகளிலும் சமாஜ்வாதியும், பீகாரிின் அரேரியாவில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளமும் முன்னிலை பெற்றுள்ளன.

  அடுத்த ஆண்டு லோக்சபா பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பாஜக பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், பிரதமர் மோடியின் அலை ஓய்ந்துவிட்டது என்று சிவசேனா கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Bypoll results prove PM Modi wave is over says Shiv Sena.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற