For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இடைத்தேர்தல்: 4 லோக்சபா, 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது

By Siva
Google Oneindia Tamil News

Recommended Video

    விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. பலி | 10 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு துவங்கியது- வீடியோ

    பெங்களூர்: கேரளா உள்ளிட்ட 10 சட்டசபை தொகுதிகளுக்கும், 4 லோக்சபா தொகுதிகளுக்குமான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி நடந்து வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பாலஸ் கடேகோன், உத்தர பிரதேசத்தில் உள்ள நூர்பூர், பீகாரில் உள்ள ஜோகிஹாத், ஜார்கண்டில் உள்ள கோமியா, சில்லி, கேரளாவில் உள்ள செங்கனூர், மேகாலயாவில் உள்ள அம்பாதி, பஞ்சாபில் உள்ள சாகோட், உத்தரகண்டில் உள்ள தாரளி, மேற்கு வங்கத்தில் உள்ள மகேஷ்தலா ஆகிய 10 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    Bypolls for 4 lok sabha, 10 assembly constituencies begin

    மேலும் மகாராஷ்டிராவில் உள்ள பந்தாரா-கோண்டியா, பலகார், நாகாலாந்து மாநிலத்தில் உள்ள நாகாலாந்து, உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா ஆகிய 4 எம்.பி. தொகுதிகளுக்கும் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஆர்.ஆர். நகர் தொகுதிக்கு இன்று தான் தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகள் அனைத்திலும் வாக்குப்பதிவு துவங்கி நடந்து கொண்டிருக்கிறது.

    உத்தர பிரதேசத்தில் கடந்த மார்ச் மாதம் நடந்த இடைத்தேர்தலில் பாஜகவை தோற்கடித்தது போன்றே இன்றைய தேர்தலிலும் தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன.

    இந்த காரணத்தால் கைரானா லோக்சபா தொகுதி மீது அனைவரின் கவனமும் உள்ளது.

    English summary
    Polling for four Lok Sabha and ten assembly constituencies have begun on monday morning.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X