மோடி அமைச்சரவையில் மாற்றம்.. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சரானார்
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அமைச்சரவையில் இன்று மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக புரமோஷன் கொடுக்கப்பட்டுள்ளார்.
மத்திய விளையாட்டு துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் அசாம் மாநில முதல்வராக பதவியேற்றுள்ளதால், அந்த பதவியிடத்திற்கு அதே மாநிலத்தை சேர்ந்த ராஜன் கோஹெய்ன் நியமிக்கப்பட்டுள்ளார்.

19 புதிய மத்திய அமைச்சர்களில் 2 பெண்கள் இடம்பெற்றுள்ளனர். இதன் மூலம் மத்திய அமைச்சர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்.ஜே. அக்பர் மத்திய அமைச்சராகியுள்ளார். ராஜஸ்தானைச் சேர்ந்த அர்ஜூன் ராம் மெக்வால் மத்திய அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
கர்நாடகாவை சேர்ந்த ஜிக ஜினாகி இணை அமைச்சராக பதவியேற்றார். இவர் வட கர்நாடக பாஜகவின் முக்கிய பிரமுகராகும். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த அனில் மாதவ் தவே மத்திய அமைச்சராக பதவியேற்றார். குஜராத்தை சேர்ந்த மன்சுக் எல்.மண்டாவியா, உ.பி.யை சேர்ந்த மகேந்திரநாத் பாண்டே, அனுப்பிரியா பட்டேல் ஆகியோரும் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.
மகாராஷ்டிராவைச் சேர்ந்த ராம்தாஸ் அத்வாலே மத்திய அமைச்சராக பொறுப்பேற்றார். டெல்லியைச் சேர்ந்த விஜய் கோயல் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றார். குஜராத்தைச் சேர்ந்த புருஷோத்தம் ரூபாலா மத்திய இணையமைச்சராகியுள்ளார். கடவுள் மீது ஆணையிட்டு அனைவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications