கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி
கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றால் அது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கொரோனா வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என்றும், எனவே இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரணை செய்த கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் கடும் அதிருப்தி அளிக்கும் வகையில் இருப்பதாகத் தெரிவித்தார். மேலும், தேர்தல் ஆணையத்திற்குச் செயல்பட அதிகாரம் இருந்தும் செயல்படாமல் இருப்பதாகவும் விமர்சித்தார்.
இது தொடர்பாக மேலும் நீதிபதி கூறுகையில், கொரோனா காலங்களில் தேர்தல் நடத்த என்ன நடவடிக்கையைத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ளது. தேர்தல் ஆணையம் வெறும் அறிவிப்பை வெளியிட்டுவி்ட்டு அமைதியாக உள்ளது. தேர்தல் ஆணையத்திற்கு விதிமுறைகளைச் செயல்படுத்தும் அதிகாரம் உள்ளது" என்றார்.
மேலும், தேர்தல் ஆணையம் டி.என். சேஷன் காலத்தில் அவர் செய்த பத்தில் ஒரு பங்கைக்கூடச் செய்யவில்லை என்றும் விமர்சித்தனர். இது தொடர்பாகத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்றும் எச்சரித்தார்.
கொரோனா விதிகளை அமல்படுத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து நாளை பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
-
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications