For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கெஜ்ரிவாலை இம்பிரஸ் செய்த கலிபா உமர் கத்தாபின் நிர்வாகத் திறன்

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: கலிபா உமர் கத்தாபின் நிர்வாகத் திறமை தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய சர்வதேச மைய நிகழ்ச்சியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொண்டார். அப்போது ஆத்திக்கா சித்திக்கி என்ற மாணவி கெஜ்ரிவாலுக்கு கலிபா உமரின் நிர்வாகத் திறன் பற்றிய புத்தகத்தை கெஜ்ரிவாலுக்கு பரிசளித்தார்.

Caliph Umar is a role model: Kejriwal

அப்போது கெஜ்ரிவால் கூறுகையில்,

கலிபா உமர் கத்தாபின் நிர்வாகத் திறன் என்னை வெகுவாக கவர்ந்துள்ளது. நான் அவர் பாதையில் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி செய்வேன் என்றார்.

உமர் கத்தாபின் நிர்வாகத் திறன் கெஜ்ரிவாலை மட்டும் அல்ல மகாத்மா காந்தியையும் வெகுவாக கவர்ந்திருந்தது. காந்தி தான் எழுதிய கட்டுரை ஒன்றில் தெரிவித்திருப்பதாவது,

நான் ஸ்ரீராமச்சந்தர் மற்றும் ஸ்ரீகிருஷ்ணாவை உதாரமணாக கூற முடியாது. அவர்கள் வரலாற்றால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் அல்ல. நான் பரந்து விரிந்த சாம்ராஜ்ஜியத்தை ஆட்சி செய்த அபுபக்கர்(ரலி அல்லாஹு அன்ஹு) மற்றும் உமர்(ரலி அல்லாஹு அன்ஹு) ஆகியோரை உதாரணமாக கூறகிறேன். அவர்கள் பெரிய சாம்ராஜ்ஜியத்தை ஆண்டபோதிலும் எளிமையாக வாழ்ந்தனர்.

இந்தியாவுக்கு கலிபா உமர் போன்ற தலைவர் தேவை என்று எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Delhi CM Arvind Kejriwal told that he is impressed by Caliph Umar's governance and would try to follow his path for the betterment of the people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X