பால் கொடுப்பது போல அட்டைப்படம் வெளியிட்ட எழுத்தாளர் மீது வழக்கு.. கேரளாவில் பரபரப்பு
கேரள பெண் எழுத்தாளர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல வெளியான மலையாள இதழின் அட்டைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரள பெண் எழுத்தாளர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல வெளியான மலையாள இதழின் அட்டைப்படத்திற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டு இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் அந்த பத்திரிக்கைக்கு எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இது மோசமான விளம்பர செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
புத்தகத்திற்கு உள்ளேயே பால் கொடுக்கும் புகைப்படங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது.

என்ன படம்
கேரள பெண் எழுத்தாளரும், மாடலுமான ஜிலு ஜோசப், மலையாள இதழான கிரிஹலட்சுமிக்கு வித்தியாசமாக அட்டைப்பட போஸ் கொடுத்துள்ளார். பொதுவில் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களை தப்பான கண்ணோட்டத்தில், பார்க்க கூடாது என்பதை வலியுறுத்துவதற்காக ஜிலு ஜோசப்பை குழந்தைக்கு பால் கொடுப்பது போல போஸ் கொடுத்துள்ளார்.

வைரல்
இந்த அட்டைப்படம் மிகவும் வைரல் ஆனது. பலரும் இந்த அட்டைப்படம் மிகவும் பிடித்து இருக்கிறது என்றார்கள். கேரளா மட்டும் இல்லாமல் தமிழ்நாடு தொடங்கி இந்தியா முழுக்க இந்த படம் வரவேற்பை பெற்றது.

சிலர் எதிர்ப்பு
அதே சமயத்தில் இதற்க்கு எதிரிப்பு கிளம்பியது. இது மோசமான விளம்பர யுக்தி என்று கூறப்பட்டது. எப்படி இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிடலாம் என்று சிலர் கேட்டு இருந்தார்கள்.

வழக்கு தொடுக்கப்பட்டது
தற்போது இதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கிரிகலட்சுமி பத்திரிகைக்கு எதிராக வக்கீல் வினோத் மேத்யூ என்பவர் கொல்லம்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். மேலும் ஜிலு ஜோசப்புக்கு எதிராகவும் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கு மீது மார்ச் 16 ந்தேதி விசாரணை நடத்தப்பட உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications