ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் போது சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் (Caste census) என பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் தரப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேரை பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல் சுட்டுப் படுகொலை செய்தது. இதனையடுத்து பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்தது. பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வெளியேற்றம்; பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் எண்ணிக்கை குறைப்பு; பாகிஸ்தானுடனான வாகா, அட்டாரி எல்லைகள் மூடல் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டது.
இதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கான சிந்து நதிநீர் திறப்பு நிறுத்தப்பட்டது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்கள் வெளியேற்றப்பட்டனர். வாகா, அட்டாரி எல்லைகள் வழியாக பாகிஸ்தானுடனான அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு இந்த எல்லைகள் மூடப்பட்டுள்ளன.
இதற்கு பதில் தருவதாக பாகிஸ்தானும் சில நடவடிக்கைகளை அறிவித்தது. இந்தியாவுடனான யுத்தத்தை தவிர்க்கும் சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்வது, இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்பரப்பில் தடை, இந்தியர்கள் வெளியேற்றம் என்பது பாகிஸ்தானின் அறிவிப்பு.
இந்த நிலையில் தங்கள் நாடு மீது இந்தியா எந்த நேரத்திலும் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என பீதியில் அலறிக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். இந்த அச்சத்தால் ஜம்மு காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவத்தினர் மீது தொடர்ந்து 6-வது நாளாக இன்றும் தாக்குதல் நடத்தி வருகிறது.
டெல்லியில் பிரதமர் மோடியும் நேற்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்று அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. 2011-ம் ஆண்டுதான் கடைசியாக மக்கள் தொகை நடத்தப்பட்டது. இனி அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பானது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பாக நடத்தப்படும் என்பது இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் முடிவாகும்.
-
இந்த பாம்பு இங்கே தான் ஒளிஞ்சிருக்கா? இந்தியாவில் மிகப்பெரிய சாதனை.. கீல்பேக் வெல்கம் பேக் -
வயிறு எரியுது..1 டீ 25 ரூபாயா? ரூ.40க்கு விற்கப்படும் இட்லி வடை! 6,000ஐ தாண்டிய வணிக கேஸ் சிலிண்டர்! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்?












Click it and Unblock the Notifications