ராஜஸ்தானில் ஜாதி மோதல் உச்சம்: 3 தலித்துகள் டிராக்டர் ஏற்றி கொடூர கொலை
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இரு தரப்பினர் மோதல் காரணமாக தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மூவர் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டனர். வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டதால் அங்கு பதற்றம் காணப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜாட் மற்றும் தலித் மக்களுக்கு மத்தியில் அடிக்கடி மோதல் நடைபெறுவது வழக்கம். இரு தினங்களுக்கு முன்பு நாகவுர் மாவட்டத்தில் உள்ள தங்காவாஸ் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கடந்த வியாழக்கிழமை ஜாட் இனத்தை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜாட் இனத்தவர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி உள்ள கிராமங்களில் புகுந்து வெறியாட்டம் நிகழ்த்தினர். இதில் ஏற்பட்ட மோதலில் நூற்றுக்கணக்கான தலித்களின் வீடுகளை சூறையாடியும், தீ வைத்தும் ஜாட் இனத்தவர் மோதலில் ஈடுபட்டனர். இதை தடுத்து நிறுத்த போராடியவர்கள் மீது ஜாட் இனத்தை சேர்ந்த சிலர் டிராக்டரை விட்டு மோதினர். இந்த சம்பவத்தில் ரத்னராம் மேக்வால் (65), பஞ்சாராம் (60), போகாராம் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிர் இழந்தனர். மேலும் இந்த மோதலில் 6 பெண்கள் உள்பட 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஆயிரக்கணக்கான கிராம மக்கள் கையில் ஆயுதங்களுடன் மருத்துவமனையை முற்றுகையிட்டு அடித்து உடைத்தனர். இதில் மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆஜ்மீர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மோதல் ஏன்?
அப்பகுதியில் உள்ள விவசாய நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என சில தலித் குடும்பத்தினரும், தங்களுக்குத்தான் சொந்தம் என ஜாட் குடும்பத்தினரும் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் நீண்டகாலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இரு தினங்களுக்கு முன்பு ஜாட் இனத்தவர் கூட்டிய பஞ்சாயத்தில் தலித் குடும்பத்தினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்துதான் இங்கு கலவரம் ஏற்பட்டது என்று கலவரத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். தகவல் அறிந்து அங்கு கலவர தடுப்பு போலீசார், குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ராஜஸ்தானில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications