For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்திற்கு தண்ணீரை திறந்துவிடுங்கள்.. அல்லது சிக்கலாகிவிடும்: கர்நாடக அரசு வக்கீல் எச்சரிக்கை

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: காவிரியில் தண்ணீர் திறக்க தமிழகம் நெருக்கடி தரும் நிலையில் மூத்த வழக்கறிஞர் ஃபாலி நாரிமன் ஆலோசனையை கர்நாடக அரசு கேட்டுள்ளது.

நடுவர் மன்ற தீர்ப்புபடி, காவிரியிலிருந்து அக்டோபர் மாதத்தில் 50 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டியது கட்டாயம். வறட்சியை காரணம் காட்டி இதுவரை கர்நாடகா அந்த அளவு தண்ணீர் தரவில்லை.

இதையடுத்து தமிழக அரசு சார்பில் சில தினங்கள் முன்பு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து கர்நாடக முதல்வர் நாளை மறுநாள், அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளார்.

Cauvery issue: Karnataka CM plans to discuss with state’s advocate Nariman

அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவுகளுக்கு முன்பாக, கர்நாடகா சார்பில் காவிரி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும், ஃபாலி நாரிமனுடன் அம்மாநில அரசு ஆலோசனை நடத்த உள்ளது.

கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் டெல்லி சென்று ஃபாலி நாரிமனுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே தண்ணீர் திறந்துவிடுவதுதான் உச்சநீதிமன்ற கோபத்தில் இருந்து தப்ப வழி என நாரிமன், முதல்வர் சித்தராமையாவுக்கு தெரிவித்ததாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று சித்தராமையாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார் நாரிமன். அப்போது, காவிரியில் தமிழகத்தின் பங்கு தண்ணீரை திறந்து விட வேண்டும். இல்லையெனில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்கும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த சித்தராமையா, காவிரி ஆற்றில் உள்ள அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகிவிட்டன. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் சூழ்நிலையில் கர்நாடகம் இல்லை என்று கூறினார்.

இந்த கருத்தை ஏற்க மறுத்த வக்கீல் நாரிமன், தமிழ்நாடு தாக்கல் செய்துள்ள மனுவால் சட்ட சிக்கல் ஏற்படும். சுப்ரீம் கோர்ட்டில் நம்முடைய கருத்தை நியாயப்படுத்துவது கடினம். அதனால் எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு தண்ணீரை திறந்து விடுமாறு ஆலோசனை கூறியதாகவும், தண்ணீரை திறக்காவிட்டால் தமிழகம் தொடர்ந்துள்ள வழக்கில் நமக்கு பின்னடைவு ஏற்படும் என்று எச்சரித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மூத்த வழக்கறிஞரான இவர்தான், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைபட்டு, ஜாமீன் கிடைக்காமல் போராடிவந்த ஜெயலலிதாவுக்காக கர்நாடக ஹைகோர்ட்டில் ஆஜராகி ஜாமீன் பெற்றுத் தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Karnataka Chief Minister plans to send minister M.B. Patil to Delhi to discuss the issue with the the state’s advocate in the Supreme Court, Fali S. Nariman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X