For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரி மேற்பார்வை குழு கூட்டம் உத்தரவு எதிரொலி.. மண்டியாவில் விவசாயிகள் போராட்டம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

பெங்களூர்: காவிரி மேற்பார்வை குழு கூட்டத்தில் இன்று எடுக்கப்பட்ட முடிவுப்படி, தமிழகத்திற்கு வரும் 21ம் தேதி முதல் 10 நாட்களுக்கு தினமும் 3,000 கன அடி தண்ணீரை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த செய்தி வெளியான அடுத்த நிமிடமே, கேஆர்எஸ் அணை அமைந்துள்ள, மண்டியா மாவட்டத்தில் விவசாயிகள் போராட்டத்தில் குதித்தனர். பெங்களூர்-மைசூர் நகரங்கள் இடையே அமைந்துள்ள மண்டியா நகரின் சஞ்சய் சர்க்கிளில், விவசாயிகள் சுமார் 20 பேர் அமர்ந்து தர்ணா நடத்தியதால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Cauvery supervisory committee order reflected in Mandya district

கர்நாடக, தமிழக அரசுகளை கண்டித்து விவசாயிகள் கோஷம் எழுப்பினர். போக்குவரத்துக்கு இடையூறு செய்ய வேண்டாம் என போலீசார் கோரிக்கைவிடுத்தபோது அவர்களுடன் விவசாயிகள் மோதலில் ஈடுபட்டனர்.

ஆனால், 3 ஆயிரம் கன அடி தண்ணீர் என்பது குறைந்த அளவு என்பதே பொதுநோக்கர்கள் கருத்தாக உள்ளது. இந்த அளவு தண்ணீரை விடுவிக்க, அணைகளின் மதகுகளை திறக்ககூட தேவையில்லை என்பதே நிதர்சனம்.

English summary
Cauvery supervisory committee order reflected in Mandya district as farmers enter protest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X