ரூ139.35 கோடி ஊழல்: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு சிறை
ராஞ்சி: 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. மேலும் லாலு பிரசாத் யாதவுக்கு ரூ60 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் 1991-ம் ஆண்டு 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்தார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவ். லாலு ஆட்சிக் காலத்தில் போலி ஆவணங்கள் மூலம் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக அரசு கருவூலங்களில் இருந்து ரூ950 கோடி பணம் மோசடியாக பெறப்பட்டது என்பது வழக்கு.
இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டன. இதுவரை 4 வழக்குகளில் லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

5-வது வழக்கில் 5 ஆண்டு சிறை
கடந்த வாரம் 5-வது மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியது ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம். இந்நிலையில் இன்று லாலு பிரசாத் யாதவுக்கு மேலும் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ60 லட்சம் அபராதமும் விதித்து ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

வழக்கு விவரம்
பீகார் மாநிலத்தில் இருந்து பிரிக்கப்பட்ட தற்போதைய ஜார்க்கண்ட் மாநிலத்தின் டோரண்டா கருவூலத்தில் லாலு ஆட்சிக் காலத்தில் ரூ139.35 கோடி பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பான 5-வது வழக்கு. இதில் மொத்தம் 168 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இவர்களில் 55 பேர் மரணம் அடைந்துவிட்டனர். 7 பேர் அரசு தரப்பு சாட்சிகளாகினர். 2 பேர் அப்ரூவராகினர். மேலும் 6 பேர் தொடர்ந்து தலைமறைவாகி உள்ளனர்.

75 பேர் குற்றவாளிகள்
இதில் லாலு பிரசாத் உட்பட 75 பேர் குற்றவாளிகள் என சிபிஐ நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது. மேலும் 24 பேர் விடுதலை செய்யப்பட்டனர். லாலு மீதான இந்த 5-வது ஊழல் வழக்கில் ஏற்கனவே 35 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லாலு உள்ளிட்டோருக்கு இன்று தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜாமீன்
முன்னதாக 4 ஊழல் வழக்குகளிலும் தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ் 2017-ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையை காரணம் காட்டி கடந்த ஆண்டு ஏப்ரலில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதையடுத்து சிறையில் இருந்து விடுதலையான லாலு பிரசாத் டெல்லியில் தங்கி இருந்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications