பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு- தயாநிதி மாறன் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்
தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு ரூ.1 கோடியே
டெல்லி: தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 போஸ்ட் பெய்டு செல்போன் இணைப்புகளையும் முறைகேடாக பயன்படுத்தியதாகவும், அதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தவர் தயாநிதிமாறன். பதவியில் இருந்தபோது, 323 பிஎஸ்என்எல் தொலைபேசி இணைப்புகளையும், 19 செல்போன் இணைப்புகளையும் (போஸ்ட் பெய்ட்) தனது போட் ஹவுஸ் இல்லத்தில் இருந்து முறைகேடாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது.
323 தொலைபேசி இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்தினார் என்றும் இதனால் அரசுக்கு ரூ. 440 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எஸ்.குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

தயாநிதி மாறன்
2004, மே மாதம் முதல் 2007, மே மாதம் வரை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார். 2007ல் அமைச்சர் பதவியில் இருந்து அவர் விலகியதும், திமுக லோக்சபா உறுப்பினராக நீடித்தார். அப்போது அமைச்சர் என்ற முறையில் தனக்கு ஒதுக்கப்பட்ட தொலைபேசி எண் "24371515' சேவையை "எம்.பி. ஒதுக்கீட்டுக்கானதாக மாற்றித் தரும்படி பிஎஸ்என்எல் தலைமை அதிகாரிக்கு அவர் கடிதம் அனுப்பினார்.

பிஎஸ்என்எல் இணைப்புகள்
இதையடுத்து, "தயாநிதி மாறன் குறிப்பிட்ட "2437' எனத் தொடங்கும் தொலைபேசி எண்ணுக்குரிய சேவை, சாதாரண பயன்பாட்டுக்கானதல்ல. அதனுடன் நூற்றுக்கணக்கான தொலைபேசி சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன' என்பது கண்டறியப்பட்டு, மேலதிகாரிகளுக்கு தகவல் அனுப்பப்பட்டது.

சிபிஐ சோதனை
இது குறித்து சிபிஐக்கு வந்த புகார்களின் அடிப்படையில், தயாநிதி மாறனின் சென்னை போட் கிளப் வீட்டிலும், சன் டிவி அலுவலகத்திலும் 2007, செப்டம்பரில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, "24371500' என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறன் பெயரில் அல்லாமல் "பிஎஸ்என்எல் பொது மேலாளர்-சென்னை தொலைபேசி இணைப்பகம்' என்ற பெயரில் செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அதே சமயம், தயாநிதி மாறனின் வீட்டில் அப்போது தொலைபேசி எண் "24371515' பயன்பாட்டில் இருந்தது.

சன்டிவி நேரடி ஒளிபரப்பு
24371515' என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகள் பற்றி சிபிஐ நடத்திய விசாரணையில், 2007, மார்ச் மாதத்தில் மட்டும் 48,72,027 யூனிட் தொலைபேசி அழைப்புகள் செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணுக்குரிய இணைய வசதியைப் பயன்படுத்தி விடியோக்களை உலகின் எந்தப் பகுதிக்கும் நேரலை ஒளிபரப்புக்கு இணையான வேகத்தில் அனுப்ப முடியும். தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி நிறுவனத்துக்காக மேற்கண்ட தொலைபேசி சேவை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது.

வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு இணைப்பு
நூற்றுக்கணக்கான இணைப்புகளைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகம் போன்ற வசதி, தயாநிதி மாறனின் போட் கிளப் இல்லத்தில் இருந்து தேனாம்பேட்டையில் இயங்கிய அவரது சகோதரர் கலாநிதி மாறனின் சன் டிவி அலுவலகம் வரை பூமிக்கு அடியில் ஆப்டிக் ஃபைபர் கேபிள் மூலம் இணைக்கப்பட்டது சிபிஐயின் சந்தேகத்தை வலுப்படுத்தியது.

அரசுக்கு இழப்பு
இது குறித்து அப்போதைய மத்திய தொலைத்தொடர்புத் துறைச் செயலருக்கு சிபிஐ அனுப்பிய கடிதம் மீது மேல் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்தப் பின்னணிதான் பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக தயாநிதி மாறன் மீது வழக்குத் தொடர முக்கிய காரணம்
இதனால் அரசுக்கு ரூ.1.2 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டதாக கடந்த 2011ம் ஆண்டு சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது குறித்து கடந்த 2015ம் ஆண்டு ஜூலை மாதம் தயாநிதி மாறனுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தியது சிபிஐ. இந்த வழக்கில் கைது செய்யப்படாமல் இருக்க முன் ஜாமீனும் பெற்றார் தயாநிதி மாறன்.

குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த நிலையில் பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக பயன்படுத்திய வழக்கில் தயாநிதி மாறன் மீதும் பிஎஸ்என்எல் அதிகாரிகள் மீதும் சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே ஏர்செல்-மாக்சிஸ் விவகாரத்திலும் தயாநிதி மாறன், சன்டிவி நிறுவனர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications