இந்திய பீரங்கி உதிரிபாகங்களிலும் போலியை புகுத்திய சீனா.. பகீர் தகவல் அம்பலம்.. சிபிஐ விசாரணை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டது என மிகவும் மலிவான விலையிலான சீன உதிரி பாகங்கள் இந்திய தயாரிப்பு பீரங்கிகளில் பொருத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக டெல்லியை தலைமையகமாக செயல்படும் நிறுவனம் ஒன்றின் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.

1999 கார்கில் போரில் போது இந்திய ராணுவத்தில் தனுஷ் எனப்படும் போபர்ஸ் பீரங்கிகள் முக்கிய பங்கு வகித்தன.

இவ்வகையான பீரங்கிகள் புதிய தொழில் நுட்பங்களுடன் இப்போதைய கால கட்டத்திற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வருகிறது.

போலி உதிரிபாகங்ககள்

போலி உதிரிபாகங்ககள்

போபர்ஸ் பீரங்கிகள் மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்பட்ட பீரங்கிகளில், 'வயர் ரேஸ் ரோலர் தாங்கி' என்ற போலி சீன உதிரி பாகங்கள் மாற்றப்பட்டுள்ளது என்று சிபிஐ விசாரணையில் தெரியவந்து உள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

உதிரி பாகங்களை கொள்முதல் செய்வதற்காக ரூ.35 லட்சம் மதிப்பில் டெல்லியை சேர்ந்த சித் சேல்ஸ் சிண்டிகேட் என்ற ஆயுத உதிரி பாகங்கள் விநியோக நிறுவனத்திடம், 2013ல் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், ஜெர்மனியில் உள்ள சிஆர்பி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட உதிரிபாகம் என்று மோசடி செ்யது, போலியாக சீன தயாரிப்பு உதிரி பாகங்களை வழங்கி உள்ளது அந்த நிறுவனம்.

சிபிஐ விசாரணை

சிபிஐ விசாரணை

சிபிஐ நடத்திய முதல்கட்ட விசாரணையில் இது தெரியவந்து உள்ளது. இந்த முறைகேட்டுக்கு ஜபல்பூர் ஆயுத தொழிற்சாலை அதிகாரிகளே உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

அதிகாரிகளும் உடந்தை

அதிகாரிகளும் உடந்தை

இதுதொடர்பாக டெல்லியை சேர்ந்த நிறுவனம் மற்றும் ஆயுத தொழிற்சாலையின் அடையாளம் தெரியாத அதிகாரிகளுக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
China-made parts camouflaged as 'Made in Germany' found their way to the production line of indigenised Bofors guns used by the army, prompting the CBI to file a case against a Delhi-based company.
Please Wait while comments are loading...