'வியாபம்' ஊழல்... முதற்கட்டமாக 29 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு
டெல்லி : மத்திய பிரதேச மாநிலத்தை உலுக்கிய தேர்வு வாரிய முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கிய சி.பி.ஐ., தனது முதற்கட்ட விசாரணையின் முடிவில் 29 பேர் மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
"வியாபம்" எனப்படும் மத்திய பிரதேச அரசின் தொழில் தேர்வு வாரிய ஊழல், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஊழலில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், சாட்சிகள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் நிலையில், இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இதனையடுத்து "வியாபம்" ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. இணை இயக்குனர் அளவில் உள்ள அதிகாரி தலைமையில் 40 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த குழுவினர் போபால் சென்று "வியாபம்" தொடர்பான விசாரணையில் இறங்கி உள்ளனர்.
இந்நிலையில், 2010 ஆம் ஆண்டு நடந்த தேர்வு தொடர்பான வழக்கில் முதற்கட்டமாக 21 பேர் மீது மோசடி, ஏமாற்றுதல் மற்றும் குற்ற சதி ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
இதேபோல், 2011 ஆம் ஆணடு நடைபெற்ற தேர்வில் தொடர்புடைய மற்றொரு வழக்கில் 8 நபர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications