For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வங்கிகளுக்கு மாதத்தில் இனி 2 சனிக்கிழமைகள் பொது விடுமுறை.. செப்.1 முதல் அமல்.. மத்திய அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி : நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு இனி மாதம் தோறும் 2 சனிக்கிழமைகள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இந்த விடுமுறை அறிவிப்பு வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிதி சேவைத்துறையின் இணைச் செயலாளர் முகமது முஸ்தபா வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிசர்வ் வங்கிப் பட்டியலில் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மாதத்தின் 2 வது மற்றும், 4 வது சனிக்கிழமைகள் பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

RBI

இதற்கான அரசாணை ரிசர்வ் வங்கி ஒப்புதலுடன் நேற்று வெளியிடப்பட்டது.
அதே சமயம் மாதத்தின் முதல் மற்றும் 3 வது சனிக்கிழமைகளில் முழு வேலை நாளும் வங்கிகள் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர் சங்கங்களுக்கும் இந்திய வங்கிகள் சங்கத்துக்கும் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எட்டப்பட்பட்டிருந்தது.

வாரத்தில் 5 நாட்கள் மட்டும் வேலைநாட்களாக அறிவிக்குமாறு வங்கிகள் சங்கம் கேட்டுக் கொண்ட நிலையில் 2 மற்றும் 4 வது சனிக்கிழமை மட்டும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேசிய விடுமுறை நாட்களிலும் வங்கிகள் செயல்படாது.

English summary
Central government declares 2nd and 4th saturady of every month as public holiday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X