அப்பாடா.. ஜல்லிக்கட்டு தொடர்பான 2 அறிவிக்கைகளை வாபஸ் பெற்றது மத்திய அரசு!
ஜல்லிக்கட்டு தொடர்பான 2 அறிவிக்கைகளை திரும்பப்பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஜல்லிக்கட்டு நடத்த இனி தடை ஏதும் இருக்காது என கூறப்படுகிறது.
டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பாக 2011 மற்றும் 2016ஆம் ஆண்டு வெளியிட்ட 2 அறிவிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதையடுத்து டெல்லி விரைந்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவசரச்சட்டம் இயற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

இதையடுத்து கடந்த சனிக்கிழமை ஜல்லிக்கட்டுக்க அவசரச்சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த அவசரச்சட்டம் நேற்று தமிழக சட்டசபையில் சட்டமாக்கப்பட்டது.
இந்நிலையில் 2011 மற்றும 2016ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட 2 அறிக்கைகளை திரும்பப் பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதாவது 2011ஆம் ஆண்ட காட்சிப்படுத்த தடை செய்யும் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டு அப்போதைய மத்திய அரசால் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இதனால் ஜல்லிக்கட்டுக்கு காளைகளை பயன்படுத்த முடியாமல் போனது. எனவே, தமிழக கோரிக்கையை ஏற்று 2016ஆம் ஆண்டு பாரம்பரிய கலாச்சார விழாவாக ஜல்லிக்கட்டை நடத்தலாம் என கூறி மத்திய அரசு ஒரு அறிவிக்கை வெளியிட்டிருந்தது. இந்த அறிவிக்கையை எதிர்த்து பீட்டா போன்ற அமைப்புகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் இந்த 2 அறிவிக்கைகளையும் தற்போது திரும்பப்பெறுவதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான மனு நாளை தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவால் ஜல்லிக்கட்டு நடத்த இனி எந்த தடையும் இருக்காது என கூறப்படுகிறது.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications