அரசியல் வன்முறைகள் நீடிப்பு- மே.வங்க மமதா அரசு டிஸ்மிஸ்?
கொல்கத்தா: அரசியல் வன்முறைகள் தொடர்ந்து நீடிப்பதால் மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியை மத்திய அரசு கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லோக்சபா தேர்தலின் போது அதிக வன்முறைகள் நடந்த மாநிலமாக இருந்தது மேற்கு வங்கம். லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரும் வன்முறைகள் ஓய்ந்தபாடில்லை.
அண்மையில் பாஜக தொண்டர்கள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இவர்களை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரே சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது.

பாஜக கொந்தளிப்பு
மேலும் உயிரிழந்த தொண்டர்களின் உடல்களை பாஜக தலைமை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. இது பாஜகவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமித்ஷாவுடன் ஆளுநர் சந்திப்பு
இந்நிலையில் டெல்லி சென்ற மேற்கு வங்க ஆளுநர் கேசரிநாத் திரிபாதி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது மேற்கு வங்க நிலவரம் குறித்து அமித்ஷாவிடம் அவர் விவரித்தார்.

ஜனாதிபதியுடன் ஆலோசனை
பின்னர் பிரதமர் மோடியுடனும் கேசரிநாத் ஆலோசனை நடத்திவிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் சந்தித்தார். இச்சந்திப்புகளைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் மமதா அரசு கலைக்கப்படலாம் என தகவல் பரவியது.

மமதா ஆட்சி டிஸ்மிஸ்?
மமதா ஆட்சியை கலைத்துவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அங்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்க பாஜக பொறுப்பாளர் கைலாஷ் விஜய்வர்ஜியாவும் கருத்து தெரிவித்திருந்தார்.

பாஜக பொறுப்பாளர் எச்சரிக்கை
இது தொடர்பாக அவர் கூறுகையில், மேற்கு வங்க அரசானது துப்பாக்கிகளாலும் தோட்டாக்களாலும் நடத்தப்பட்டு வருகிறது. இதே நிலைமை நீடித்தால் மேற்கு வங்க விவகாரத்தில் மத்திய அரசு தலையிட நேரிடும். தேவைப்பட்டால் அரசியல் சாசனத்தின் 356-வது பிரிவின் கீழ் ஆட்சி கலைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படலாம் என கூறியிருந்தார். இதனால் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
-
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications