17 வயது பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த 5 போலீசார் கைது
சன்டிகர்: சன்டிகரில் 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
சன்டிகரைச் சேர்ந்த 17 வயது சிறுமி குடும்ப பிரச்சனை குறித்து புகார் கொடுக்க போலீசாருக்கு போன் செய்துள்ளார். அதை வைத்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிறுமியின் நம்பரை டிரேஸ் செய்துள்ளார். இந்நிலையில் சிறுமி பள்ளிக்கு சென்றபோது அந்த கான்ஸ்டபிள் அவரை போலீஸ் கட்டுப்பாட்டு அறை வேனுக்கு கொண்டு சென்றுள்ளார்.
வேனில் வைத்து சிறுமியை அவர் உள்பட 5 கான்ஸ்டபிள்கள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்தனர். மேலும் அவர்கள் அந்த சிறுமியை மிரட்டி பல வாரங்களாக பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சிறுமி தற்கொலைக்கு முயன்றபோது தான் அவரது குடும்பத்தாருக்கு விவரம் தெரிய வந்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் அந்த 5 கான்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மருத்துவ பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அவர்கள் கொண்டு வரப்பட்டனர். அப்போது அவர்களை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.












Click it and Unblock the Notifications