For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு.. சந்திரபாபு நாயுடு அதிரடி அறிவிப்பு

ஆந்திராவை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

By Karthikeyan
Google Oneindia Tamil News

ஹைதராபாத் : ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் நோபல் பரிசு வென்றால் அவர்களுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

திருப்பதியில் உள்ள பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக வளாகத்தில் சிறுவர்கள் அறிவியல் மாநாட்டை சந்திரபாபு நாயுடு நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், விளையாட்டையும், விளையாட்டு வீரர், வீராங்கனைகளையும் ஊக்குவிப்பது போல் அறிவியல் துறையில் சாதனை நிகழ்த்துபவர்களையும் ஊக்குவிக்க வேண்டும்.

Chandra babu naidu announced give 100 crores prize money for scientists if they won nobel prize

பல திறமைசாலிகள் இருந்தும் நோபல் பரிசு வாங்கும் இந்தியர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே ஆந்திராவில் இருந்து நோபல் பரிசு வாங்கும் விஞ்ஞானிகளுக்கு தலா ரூ.100 கோடி பரிசு வழங்கப்படும். இளைஞர்கள் இதனை சவாலாக எடுத்துக்கொண்டு கடுமையாக உழைக்க வேண்டும். அந்த உழைப்பின் மூலம் நோபல் பரிசு பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார்.

English summary
Andra CM Chandrababu announced that govt will give 100 crores prize money for scientists if they won nobel prize
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X