சந்திரபாபு நாயுடுவை நெருங்கிய பெண்! திடீரென செய்த காரியம்.. ஒரு நொடி ஸ்டன் ஆன காவலர்கள்.. கலகல
அமராவதி: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இப்போது அனகப்பள்ளி நகருக்குச் சுற்றுப் பயணம் சென்றுள்ளார்.. அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை பெண் தொண்டர் ஒருவர் திடீரென நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாயுடுவுக்கு அருகே இருந்த காவலர்கள் அனைவரும் பதறிய நிலையில், கடைசியில் நடந்த சம்பவம் பெரும் சிரிப்பலைகளை ஏற்படுத்தியது.
நம்ம ஊரில் சினிமா நட்சத்திரங்களுக்கு எப்போதும் தனி ரசிகர் பட்டாளமே இருப்பார்கள். தங்களின் ஹீரோவுக்கு எதாவது ஒன்று என்றால் முதலில் வந்து நிற்பது இந்த ரசிகர்கள் தான்.

அதேநேரம் சில அரசியல் தலைவர்களுக்கும் கூட இதுபோல தனி தொண்டர்கள் இருப்பார்கள். அவர்கள் தங்கள் தலைவருக்காக எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருப்பார்கள். அப்படியொரு பெண் தொண்டர் சந்திரபாபு நாயுடுவுக்கு முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சந்திரபாபு நாயுடு: ஆந்திர மாநிலம் அனகப்பள்ளி நகருக்கு அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தெலுங்கு தேசம் கட்சியினர் திரண்டு இருந்த அவரை வரவேற்றனர். அப்போது தான் இந்தச் சம்பவம் நடந்தது.
சந்திரபாபு நாயுடு இப்போது Z plus பாதுகாப்பில் இருக்கிறார். கொலை மிரட்டல்களைத் தொடர்ந்து அவர் இந்த Z plus பாதுகாப்பில் இருக்கிறார். அவரை சுற்றிலும் போலீசார் மட்டுமின்றி தேசியப் பாதுகாப்புப் படையினரும் எப்போதும் இருப்பார்கள். மேலும், ஆயுதமேந்திய காவலர்களும் இருப்பார்கள். இதனால் யாரும் அவரை நெருங்கிச் சந்திப்பதே கடினமாகும்.
நெருங்கிய பெண்: இருப்பினும், அனைத்து காவலர்களையும் தாண்டி அந்த பெண் சந்திரபாபு நாயுடு அருகே சென்றுவிட்டார். இதைப் பார்த்ததுமே காவலர்கள் அந்த பெண்ணை தனியாக அழைத்தனர். இருப்பினும், அவர் சந்திரபாபு நாயுடுவுக்கு பூங்கொத்தை அளித்தார். அதை அவரும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார். அப்போது தான் திடீரென அந்த பெண் சந்திரபாபு நாயுடுவுக்கு கண்ணத்தில் முத்தம் தர முயன்றார். திடீரென நாயுடுவுக்கு மிக அருகில் நெருங்கியதால் தேசியப் பாதுகாப்புப் படையினர் அவரை பிடித்து இழுத்தனர்.

அடுத்து நடந்த காரியம்: சந்திரபாபு நாயுடுவும் கூட இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை.. அவரும் அதிர்ந்து போனார். இருப்பினும், டக்கென சுதாரித்த அவர் காவலர்களிடம் எதுவும் செய்ய வேண்டாம் எனத் தடுத்தார். அதேபோல அந்த பெண்ணிடமும் இதுபோல செய்யக்கூடாது என்பது போலக் கூறினார். பின்னர் அந்த பெண் போட்டோ மட்டும் எடுத்துக் கொண்டார்.
கலகல சம்பவம்: முதலில் திடீரென அந்த பெண் நெருங்கியதால் பரபரப்பு ஏற்பட்டாலும், அதன் பிறகு முத்தம் தர முயன்றது தெரிய வரவே சுற்றி இருந்தவர்கள் வெடித்துச் சிரித்தனர். சந்திரபாபு நாயுடு தனக்கு ஒரு மூத்த சகோதரன் போன்றவர் என்றும் இதனால் அன்பின் வெளிப்பாடாகவே முத்தம் தர முயன்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும் அவர், "இந்த நாளை நான் எனது வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன். இத்தனை நாள் எனது தலைவரை டிவியில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன். முதல் முறையாக நேரில் சந்திக்கிறேன். இந்த நாளை மறக்கவே மாட்டேன்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications