For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம்- சந்திரபாபு நாயுடு

Google Oneindia Tamil News

டெல்லி: பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம் என சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

காங்கிரஸ், பாஜக அல்லாத கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் கே சந்திரபாபு நாயுடு முயற்சித்து வருகிறார். இதற்காக அவர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து சென்னைக்கு வந்த அவர் ஸ்டாலினையும் சந்தித்து பேசினார்.

இந்நிலையில் ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை பாஜக நிறைவேற்றாததால் கடந்த 2014-ஆம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து முறிந்தார் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு.

விவாதம்

இதையடுத்து அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் டெல்லி சென்ற அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். அப்போது பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.

கட்டாயம்

கட்டாயம்

இதையடுத்து ராகுல்காந்தியும் சந்திரபாபு நாயுடுவும் கூட்டாக இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சந்திரபாபு நாயுடு கூறுகையில் அனைத்து கட்சிகளும் இணைந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அகற்றுவது குறிக்கோள்

அகற்றுவது குறிக்கோள்

பாஜகவுக்கு எதிராக அணி திரட்ட திமுகவையும் அணுகுவோம். யார் தலைவர் என்பதை பிறகு பேசி முடிவெடுப்போம். பிரதமர் வேட்பாளர் குறித்து பிறகு பேசுவோம். பாஜக ஆட்சியை அகற்றுவது மட்டுமே இப்போதைய ஒரே குறிக்கோள்.

மோடி

மோடி

நாடு குறித்து மட்டுமே இப்போது நாங்கள் கவலைப்படுகிறோம். நாட்டைக் காக்க அனைத்துக் கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சிபிஐ, ரிசர்வ் வங்கியை அழிக்கும் முயற்சிகளில் மோடி இறங்கியுள்ளார் என்றார் சந்திரபாபு நாயுடு.

English summary
Chandrababu Naidu says that he will gather anti BJP parties in particular DMK to form alliance.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X