பாஜகவுடன் கூட்டணி தொடரும்.. அரசியல் பரபரப்புக்கு பிரேக் விட்ட சந்திரபாபு நாயுடு
பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
அமராவதி: ஆந்திர முதல் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி தொடரும் என ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்
பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு என்று எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை, மாநில அரசிடம் மத்திய அரசு விரோத போக்கு என்பதால் விரைவில் பாஜக கூட்டணியிலிருந்து தெலுங்குதேச கட்சி வெளியேறும் என கடந்த சில நாட்களாக பேசப்பட்டது. இந்நிலையில் கூட்டணியிலிருந்து வெளியேறப்போவதில்லை என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

அமராவதியில் நடைபெற்ற தெலுங்கு தேசம் கட்சியின் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பேசிய சந்திரபாபு நாயுடு, மத்திய அரசுடன் பிரச்சினை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. மாநில நலனே முக்கியம். பா.ஜனதாவுடனான கூட்டணியை மக்கள் விரும்பாத நிலைமை வரும் போது உறவை முறித்து கொள்வது குறித்து முடிவு எடுக்கலாம் என்றார்.
மக்களின் நாடியை சரியான நேரத்தில் கண்டுபிடித்து அதன் அடிப்படையில் முன்னுக்கு செல்கிறவர்களால் தான் அரசியலில் வெற்றி பெற முடியும். எனவே இப்போதைக்கு கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டாம். இந்த விவகாரத்தில் தீவிரமான ஆலோசனைக்கு பிறகே முடிவு எடுக்க முடியும். பா.ஜனதாவுடன் ஆன உறவு குறித்து ஆலோசிக்க அமைச்சரவை மற்றும் எம்.பி.க்கள் கூட்டத்துக்கு பிறகே முடிவு எடுக்கப்படும் என்றும் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
மேலும் பா.ஜனதாவை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது என்றும் சந்திரபாபு நாயுடு கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications