24 மணி நேரத்தில் தவறுகளை திருத்தினோம்.. வரலாறு படைத்தோம்.. இஸ்ரோ சிவன் உற்சாகம்
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: சந்திரயான் -2 GSLV-Mk0III-M1 ராக்கெட் மூலமாக இன்று மதியம் 2.43 மணி நேரத்திற்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதை விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் கட்டிப் பிடித்து கொண்டாடினர்.
இதன் பின்னர், இஸ்ரோ தலைவர் கே.சிவன் நிருபர்கள், விஞ்ஞானிகள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறியதாவது:

நாங்கள் தவறுகளை சரி செய்துவிட்டு, மீண்டும், களத்தில் குதித்தோம். தொழில்நுட்ப கோளாறால் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்திராயன்-2 விண்ணில் ஏவப்பட முடியவில்லை. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில் நாங்கள் எங்கள் பாதைக்கு திரும்பினோம். தேவைப்படும், திருத்தங்கள் செய்யப்பட்டன. சில, சோதனைகள் செய்யப்பட்டு, எல்லாம் நன்றாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இது இஸ்ரோ விஞ்ஞானிகளால் சாத்தியமானது, அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது எனது கடமை.


ஜி.எஸ்.எல்.வி.எம்.கே.III-எம் 1 வெற்றிகரமாக சந்திராயன்- 2 விண்கலத்தை பூமி சுற்றுப்பாதையில் செலுத்தியதை, அறிவிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் நிலவு நோக்கிய பயணத்தில் வரலாற்று சிறப்பு மிக்க தினம் இது. இந்தியா மட்டுமின்றி உலகமே இதை எதிர்நோக்கி பார்த்துக் கொண்டிருந்தது.

தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் விஞ்ஞானிகளின் கடின உழைப்பால் மட்டுமே இந்த மிஷன் சாத்தியமானது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்த குழு இரவு, பகல் பார்க்காமல் உழைத்துள்ளது.
ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட்டின் செயல்திறன் 15% அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications