மண்டல பூஜை! சபரிமலை மலை பாதையில் சென்ற சென்னை பக்தர் மயங்கி விழுந்து பலி!
பத்தினம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ள நிலையில் மலைப்பாதையில் சென்ற சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலையில் மண்டல, மகர விளக்கு சீசனையொட்டி கடந்த நவம்பர் 16ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கார்த்திகை 1 ஆன 17ஆம் தேதி முதல் வழக்கமான பூஜை வழிபாடு நடந்து வருகிறது. இந்த சீசனையொட்டி தினமும் 70 ஆயிரம் பக்தர்கள் என்ற வீதம் 2026 ஜனவரி 10ஆம் தேதி வரை தரிசன ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது.

இந்த நிலையில், மண்டல பூஜையையொட்டி, டிசம்பர் 26 மற்றும் 27-ம் தேதிக்கான தரிசன முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இதற்கான ஆன்லைன் முன்பதிவு நேற்று மாலை தொடங்கியது. https://sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சபரிமலைக்கு ஆயிரக்கணக்கானோர் மாலை அணிந்து கொண்டு ஐயனை காண செல்கிறார்கள். அந்த வகையில் சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர் மாலை அணிந்து கொண்டு ஐயப்பனை காண சபரிமலைக்கு மலை பாதை வழியாக சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை சக பக்தர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்த போது அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் யார் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது முதல் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பு, பல்வேறு உடல் உபாதைகளால் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில்












Click it and Unblock the Notifications