சத்தீஷ்கரை காங்.ஏடிஎம் போல பயன்படுத்துகிறது.. நக்சலிசத்தை ஊக்குவிக்கிறது.. அமித்ஷா பரபர பேச்சு

Subscribe to Oneindia Tamil

ராய்பூர்: நக்சலிசத்தை காங்கிரஸ் கட்சி ஊக்குவிக்கிறது எனவும் பாஜக ஆட்சி அமைந்தால் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து சத்தீஷ்கரை விடுவிப்போம் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தேர்தல் பிரசாரத்தில் பேசினார்.

சத்தீஷ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகல் வகித்து வருகிறார். 90 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கர் சட்டப்பேரவையின் பதவிக்காலம் விரைவில் முடிவடையை உள்ளது. இதனால், அங்கு சட்டமன்ற தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதம் 7 மற்றும் 12 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

 Chhattisgarh Assembly Election 2023: BJP eliminates Naxalism if Come to power again says amitsha

சத்தீஷ்கரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதி என்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக தேர்தல் இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகிறது. சத்தீஷ்கரில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும் இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜகவும் வியூகம் வகுத்து வருகின்றன.

சத்தீஷ்கரில் அமித்ஷா: சத்தீஷ்கருக்கு தேர்தல் பிரசாரத்திற்காக காங்கிரஸ், மற்றும் பாஜகவின் தேசிய தலைவர்களும் படையெடுத்து வருகின்றனர். சத்தீஷ்கரை பொறுத்தவரை ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் கூறியிருக்கின்றன. இதனால், தேர்தல் களம் உச்ச கட்ட அனல் பறக்கிறது.

இந்த நிலையில், சத்தீஷ்கரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அமித்ஷா கூறியதாவது:- பிரதமர் மோடி ஆட்சியின் 9 ஆண்டு கால ஆட்சியில் மாவோயிஸ்ட் வன்முறைகள் 52 சதவீதம் குறைந்துள்ளது. நக்சல் வன்முறையால் உயிர் பலி எண்ணிக்கை 70 சதவிகிதம் குறைந்துள்ளது.

2 வாய்ப்புகள் உள்ளன: பொதுமக்கள் உயிரிழப்பு 68 சதவிகிதம் வரை குறைந்து இருக்கிறது. நக்சல் பாதித்த மாவட்டங்களின் எண்ணிக்கை 62 சதவிகிதமாக குறைந்துள்ளது. பஸ்தார் பிராந்தியம் ஒரு காலத்தில் நக்சல் தீவிரவாதத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டு இருந்தது. இப்போதும் கூட சில பகுதிகளில் நக்சல் ஆதிக்கம் உள்ளது. சத்தீஷ்கரில் பாஜக ஆட்சி அமைந்தால் நக்சல் அச்சுறுத்தலில் இருந்து மாநிலம் முழுவதுமாக விடுவிக்கப்படும். சத்தீஷ்கர் மக்களுக்கு 2 வாய்ப்புகள்தான் உள்ளன.

மூன்று தீபாவளி: நக்சல் பயங்கரவாதத்தை ஊக்குவித்த காங்கிரஸ். மற்றொன்று நக்சல் தீவிரவாதத்தை ஒழித்த பாஜக. சத்தீஷ்கரில் இந்த ஆண்டு மக்கள் தீபாவளியை மூன்று முறை கொண்டாட இருக்கிறார்கள். தீபாவளி பண்டிகையின் போது ஒருமுறையும் பாஜக ஆட்சி அமைக்கும் (டிச.3 தேர்தல் முடிவு) நாளில் ஒருமுறையும் , அடுத்த ஆண்டு ராமர் கோவில் கட்டுமான பணிகள் முடியும் போது ஒருமுறையும் என மூன்று தீபாவளிகள் கொண்டாட உள்ளனர்.

ஏனேனில், கடவுள் ராமரின் தாய்வழி தாத்தா - பாட்டியின் மண், சத்தீஷ்கர் ஆகும். சத்தீஷ்கர் மாநிலத்தை காங்கிரஸ் தனது ஏடிஎம் இயந்திரம் போல மாற்றிவிட்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசில் இருந்து மாநிலத்தின் வளர்ச்சிக்கு கொடுக்கப்படும் நிதி.. காங்கிரசின் ஏடிஎம் மூலமாக டெல்லிக்கு திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+