சத்தீஸ்கர் காங். அரசு அதிரடி... மாட்டு கோமியத்தை 1 லிட்டர் ரூ4 கொடுத்து விவசாயிகளிடம் வாங்குகிறது!
ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, விவசாயிடம் மாடுகளின் சிறுநீரான கோமியத்தை 1 லிட்டர் ரூ4 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் பசு பாதுகாப்பு, சாணி, கோமியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் என பல்வேறு அதிரடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக உத்தரப்பிரதேச மாநில ஆளும் பாஜக அரசு பசு பாதுகாப்புத் திட்டத்தை படுதீவிரமாக செயல்படுத்தி வருகிறது.

சத்தீஸ்கர் காங். அரசு
பாஜகவுக்கு சளைத்தது அல்ல என்பதை காங்கிரஸும் சில மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், பட்ஜெட் தாக்கல் செய்த போது, மாட்டு சாணத்தில் செய்த பெட்டியைத்தான் பயன்படுத்தியதாக கூறியிருந்தார்.

சாணி கொள்முதல்
அத்துடன் கால்நடை வளர்ப்பு தொடர்பான ஏராளமான அறிவிப்புகளையும் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு தமது பட்ஜெட்டில் அறிவித்தது. அதில் கால்நடைகளின் கோமியத்தை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் போகிறோம் என்பதும் மிக முக்கியமான அறிவிப்பு. ஏற்கனவே சத்தீஸ்கரில் கால்நடைகளின் சாணியை மாநில அரசு கொள்முதல் செய்து வருகிறது. இதனையடுத்து கோமியத்தை கொள்முதல் செய்வது தொடர்பான ஆய்வுப் பணிகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

கோமியம் கொள்முதல்
தற்போது இந்த கோமியம் கொள்முதல் திட்டம் அமலுக்கு வர இருக்கிறது. Gram Gauthan Samit மூலம் கோமியம் கொள்முதல் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயிகளிடம் ஒரு லிட்டர் கோமியம் ரூ4-க்கு வாங்கப்படும். விவசாயிகளுக்கு மாதம் இருமுறை கோமியத்துக்கான தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தின் உள்ளூர் திருவிழா ஜூலை 28-ல் நடைபெறும். அன்றைய தினம் இத்திட்டத்தை முதல்வர் பூபேஷ் பாகல் தொடங்கி வைக்க உள்ளார்.

கடும் விமர்சனம்
சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸின் இந்த திட்டமும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. மத்தியில் பாஜக அரசு, மக்கள் பிரச்சனைகளை கவனத்தில் கொள்ளாமல் திசை திருப்பிவிடுவது போல சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசும் செயல்பட்டு வருகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஏற்கனவே மத்திய பிரதேச அரசும் சாணி கொள்முதல் தொடர்பாக ஆய்வு நடத்துவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications