சத்தீஸ்கரின் தீராத தலைவலி.. அரியணையில் அமர்பவர்களால் மாவோயிஸ்ட்கள் பிரச்சினை தீருமா?
ராய்ப்பூர்: மாவோயிஸ்ட் பிரச்சினை அதிகம் உள்ள மாநிலமான சத்தீஸ்கர் மாநிலத்தை ஆளப்போவது யார் என்று இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து விடும். 23 ஆண்டு கால வரலாறு உள்ள சத்தீஸ்கர் மாநிலத்தினை இதுநாள் வரை ஆண்டவர்கள் யார் யார் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்ததா என்று பார்க்கலாம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இத்தொகுதிகளில் 20 தொகுதிளுக்கு நவம்பர் 7ஆம் தேதியும் எஞ்சிய 70 தொகுதிகளுக்கு நவம்பர் 17ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெற்றது. அனைத்து வாக்குகளும் டிசம்பர் 3ஆம் தேதியான இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பல ஆண்டுகளாக சத்தீஸ்கர் மாநிலத்தில் பல இடங்களில் மாவோயிஸ்ட் பிரச்சினை என்பது தொடர்கதையாக இருக்கிறது. இதன் காரணமாகவே அத்தனை கனிம வளங்கள் கொட்டி கிடந்தாலும் சத்தீஸ்கர் மாநிலத்தால் மற்ற மாநிலங்களைப் போல வளர முடியவில்லை.
சத்தீஸ்கர் மாநிலத்தைப் பொறுத்தவரை, அது கடந்த 2000ஆம் ஆண்டில் தான் புதிய மாநிலமாக உதயமானது. அதற்கு முன்பு வரை அது மத்தியப் பிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. சத்தீஸ்கர் தனி மாநில கோரிக்கை 1950களில் இருந்தே வந்தாலும் அது தனி மாநிலமாகவில்லை. பல ஆண்டுகள் அங்குள்ள மக்கள் தொடர்ந்து இது குறித்து வலியுறுத்தி வந்தனர். இறுதியில் கடந்த 2000ஆம் ஆண்டு அப்போதைய என்டிஏ அரசு சத்தீஸ்கரைத் தனி மாநிலமாகப் பிரித்தது.
சத்தீஸ்கர் மாநிலம் பிரிக்கப்பட்ட பின் 2000 முதல் 2003ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வராக ஜோகி இருந்தார். அதன்பின் காங்கிரஸ் கட்சியின் தலைமையுடன் ஏற்பட்ட மனக்கசப்பால் 2016ஆம் ஆண்டு பிரிந்து சென்று ஜனதா காங்கிரஸ் சத்தீஸ்கர் கட்சியை உருவாக்கினார். சமீபத்தில் நடந்த தேர்தலில் மார்வாஹி தொகுதியில் போட்டியிட்டு வென்று ஜோகி எம்எல்ஏவாக உள்ளார்.
சோனியா காந்தி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நீண்டகாலம் நட்பு பாராட்டி வந்தபோதும் அஜித் ஜோகிக்கும், ராகுல் காந்திக்கும் இணக்கமான உறவு இல்லை. இதையடுத்தே அவர் காங்கிரஸில் இருந்து வெளியேறி தனிக்கட்சியை தொடங்கினார்.
இங்கு முதல் மாநில சட்டசபை தேர்தல் 2003ஆம் ஆண்டு நடைபெற்றது. அங்குச் சட்டசபையில் மொத்தம் 90 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் பாஜக 50 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் அந்த தேர்தலில் 37 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியானது. மற்ற கட்சிகள் 3 இடங்களில் வெற்றி பெற்றன. அதன் பிறகு தொடர்ச்சியாக 15 ஆண்டுகள் அங்கு ராமன் சிங் தலைமையிலான பாஜகவே ஆட்சியில் இருந்தது.
அப்போதும் பாஜக 50 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 38 - இடங்களில் வென்றது. ஒரு இடம் அதிகமாக காங்கிரஸ் வென்றது. 2013ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்றது. பாஜக 49 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 39 இடங்களில் தான் வெற்றி பெற்றது. கிட்டத்தட்ட 2003 முதல் 2013 வரை நடந்த 3 சட்டசபை தேர்தலிலும் பாஜகவே வெற்றி பெற்று சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆட்சி அமைத்தது.
கடந்த 2008 மற்றும் 2013 சர்வேக்களில் தேர்தல் முடிவுகள் நெருக்கமாக இருந்தது. அப்போது இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 1 சதவிகிதமாக மட்டுமே இருந்தது. இருந்த போதிலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியால் பாஜகவை அரியணையில் இருந்து அகற்ற முடியவில்லை. இந்த நிலை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் ரிசல்ட் மாறியது.
2018ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. 90 இடங்களில் 68 இடங்களைக் காங்கிரஸ் கைப்பற்றியது. அதன் வாக்கு வங்கியும் 43 சதவீதமாக அதிகரித்தது. மறுபுறம் பாஜகவைப் பொறுத்தவரை அவர்களால் 33 சதவீத வாக்குகளைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும் போது எட்டு சதவீத வாக்குகளை இழந்த பாஜக, 34 தொகுதிகளிலும் கோட்டைவிட்டது.
மூன்று முறை ஆட்சியில் இருந்த பாஜக கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மிக மோசமாக தோல்வி அடைந்தது. 68 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று சத்தீஸ்கரில் ஆட்சி அமைத்தது. பாஜக 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற கட்சிகள் 7 இடங்களில் தான் வெற்றி பெற்றன. 2018 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றி பெற்றபோதும், நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற முடியவில்லை.
சத்தீஸ்கரில் காங்கிரஸ், பாஜகவைத் தவிரப் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் ஓரளவு செல்வாக்கு இருக்கவே செய்கிறது. கடந்த 2008ஆம் ஆண்டில் பிஎஸ்பி ஆறு சதவீத வாக்குகளைப் பெற்றது. 2013 மற்றும் 2018 தேர்தல்களிலும் கூட நான்கு சதவீத வாக்குகளைப் பெற்றது. இருப்பினும், தொகுதிகளைப் பொறுத்தவரை அவர்களால் ஓரிரு இடங்களுக்கு மேல் தாண்ட முடியவில்லை.
சத்தீஸ்கரில், பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவியது. சத்தீஸ்கரை பொறுத்தவரை மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டம் ஆகும். இதனால், தேர்தல் இரு கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் 74 சதவீதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவாகின. சத்தீஸ்கரில் ஆளும் கட்சியாக இருக்கும் காங்கிரஸ் இந்த முறை ஆட்சியைத் தக்க வைக்க வாய்ப்புகள் அதிகம் என்றே தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் மொத்த தொகுதிகள் 90 ஆட்சி அமைக்க மொத்தம் 46 தொகுதிகள் தேவைப்படும். இந்த முறை காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி தொடர்ந்து இரண்டாவது முறையாக அரியணை ஏறும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
சத்தீஸ்கர் மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகை சுமார் 3 கோடியாகும். சத்தீஸ்கரில் இன்னும் பெரியளவில் நகரமயமாக்கல் நடைபெறவில்லை. அவர்களில் 23.4 சதவீதம் பேர் நகர்ப்புறங்களில் மட்டுமே வசித்து வருகிறார்கள். சுமார் 77% மக்கள் கிராமப்புறங்களிலேயே வசிக்கிறார்கள். மேலும், அங்குள்ள மக்களில் 34% பேர் பழங்குடியினர் (எஸ்டி), 12% பேர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். மேலும், 50% அதிகமானோர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. அங்குச் சமவெளிப் பகுதிகளில் டெலி, சட்னாமி மற்றும் குர்மி பிரிவினர் அதிகம்.
அதேநேரம் வனப் பகுதிகள் கோண்ட், ஹல்பா, கமர்/புஜியா மற்றும் ஓரான் போன்ற பழங்குடியினர் அதிகம் வசிக்கிறார்கள். மேலும், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள 93.25% பேர் இந்துக்கள். அதைத் தொடர்ந்து அங்குள்ள 2.02% பேர் இஸ்லாமியர்களாக உள்ளனர். 1.92% பேர் கிருத்துவ மதத்தைப் பின்பற்றுகிறார்கள். அதைத் தொடர்ந்து பௌத்தம், சீக்கியர்கள், ஜைனம் உள்ளிட்ட பிற மதத்தைச் சேர்ந்தவர்களும் உள்ளனர்.
சத்தீஸ்கரை பொறுத்தவரை காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக பூபேஷ் பாகேல் உள்ளார். இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பாஜக பல்வேறு வியூகத்துடன் தேர்தலை எதிர்கொண்டது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை தக்க வைப்பத்தில் மும்முரம் காட்டியது. இதனால், சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்க இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இந்த முறை ஆட்சியை பிடிப்பதற்காக இரு கட்சிகளும் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்துள்ளன. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளின் தேசிய அளவிலான தலைவர்களும் சத்தீஸ்கரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாஜக சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்காக அக்கட்சி தலைவர் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். ராஜஸ்தான், மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானா ஆகிய ஐந்து மாநில தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், கடந்த வியாழக்கிழமையன்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்குத்தான் வெற்றி வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.
இரண்டு கட்சியினருமே தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளனர். பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத மாவோயிஸ்ட் பிரச்சினை தீர வேண்டும் என்பதே இந்த மாநில மக்களின் எதிர்பார்ப்பாகும். இந்தமுறை ஆட்சியை கைப்பற்றி அரியணை ஏறப்போகும் முதல்வர், மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா பார்க்கலாம்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications