விடிஞ்சா தேர்தல்.. சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் வெறியாட்டம்.. குண்டுவெடிப்பில் 3 பேர் படுகாயம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாளை காலை தொடங்கும் நிலையில் மாவோயிஸ்டுகள் வெடி குண்டு தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவரும் தேர்தல் அதிகாரிகள் 3 பேரும் பலத்த காயமடைந்ததால் பதற்றம் நிலவுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நாளையும் நவம்பர் 17-ந் தேதியும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் மொத்தம் 90 தொகுதிகள் உள்ளன. இதில் 20 தொகுதிகளில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் உள்ள 20 தொகுதிகளில்தான் வாக்குப் பதிவு நாளை நடைபெற உள்ளது. மாவோயிஸ்டுகள், இந்த தேர்தலை பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும் என ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தனர். அத்துடன் தேர்தல் பணிக்காக வாக்கு சாவடிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் வரக் கூடாது எனவும் அச்சுறுத்தி இருந்தனர்.
இதுநாள் வரை அமைதியாக இருந்த மாவோயிஸ்டுகள் கடந்த சில நாட்களாக தங்களது வெறித்தனத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அரசுக்கு உளவு சொன்னதாக பொதுமக்களில் ஒருவரையும் பாஜக நிர்வாகி ஒருவரையும் மாவோயிஸ்டுகள் படுகொலை செய்தனர். மேலும் வாக்கு சாவடிகளுக்கு பொதுமக்கள் வருவதை அச்சுறுத்தும் வகையில் குண்டு வெடிப்பு சம்பவங்களையும் நடத்தி வருகின்றனர்.
நாராயண்பூர் மாவட்டம் ரெங்ககாதி ரெங்ககோண்டி வாக்கு சாவடிக்கு தேர்தல் அதிகாரிகள், பாதுகாப்பு படையினருடன் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாவோயிஸ்டுகள் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர். இதில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் என மொத்தம் 3 பேர் படுகாயமடைந்தனர். தற்போது அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் வாக்கு சாவடிகளில் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாவோயிஸ்டுகளின் பகுதிகளில் 126 வாக்கு சாவடிகள் முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்கு சாவடிகள் அமைந்துள்ள பழங்குடி கிராமங்கள், நாடு விடுதலைக்குப் பின்னர் முதல் முறையாக தேர்தலில் நாளை வாக்களிக்க உள்ளனர். ஆனால் மாவோயிஸ்டுகள், பழங்குடி மக்கள் ஜனநாயகக் கடமை ஆற்றுவதைத் தடுக்கும் வகையில் இத்தகைய குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications