லட்டு மாதிரி தகவல்-10 நாள் கண்காணிப்பு... மாவோ தலைவர் ஹித்மாவுக்கு குறிவைத்த சத்தீஸ்கர் ஆபரேஷன்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் வனப்பகுதியில் பதுங்கியிருந்த ரூ25 லட்சம் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மாவை குறிவைத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாவோயிஸ்டுகளின் மூத்த தலைவரான ஹித்மா சத்தீஸ்கரின் ஜோனகுடா வனப்பகுதியில்தான் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு உளவுத் தகவல்கள் கிடைத்தன. கடந்த 10 நாட்களாக ஹித்மாவின் நடவடிக்கைகளை பாதுகாப்பு படையினர் கண்காணித்தும் வந்தனர்.

ஹித்மாவை தேடி ஆபரேஷன்
ஹித்மாவை எப்படியாவது கைது செய்ய வேண்டும் என்பதற்காகவே வெள்ளிக்கிழமை இரவு பாதுகாப்பு படையினர் பிரமாண்ட ஆபரேஷனுடன் வனப்பகுதிக்குள் நுழைந்தனர். சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் சுக்மா, பிஜப்பூர் வனப்பகுதிகளில்தான் இந்த அதிரடி வேட்டை வெள்ளிக்கிழமை இரவில் தொடங்கியது.

புதிய மாவோயிஸ்டுகள்
பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கை தொடர்பான தகவல் கிடைத்ததும் தாக்குதல் நடத்த வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் தயாராக இருந்தனர். இந்த முறை வெடிகுண்டுகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பு படையினருடன் மோதுவது என்கிற திட்டத்துடன் புதியதாக பயிற்சி பெற்ற மாவோயிஸ்டுகள் களமிறக்க்கப்பட்டனராம். ஹித்மா பதுங்கி இருக்கும ஜோனகுடாவையும் பாதுகாப்பு படையினர் நெருங்கிவிட்டனர்.

மிக நெருக்கமாக மோதல்
அப்போது பாதுகாப்பு படையினருடன் மிக நெருக்கமாக நின்ற நிலையில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை முதலில் சுற்றி வளைத்த மாவோயிஸ்டுகள் அவரது கையை வெட்டி இருக்கின்றனர். பின்னர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

கடும் வெயிலிலும் சண்டை நீடிப்பு
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த முறை நீண்ட துப்பாக்கிச் சண்டைக்கு தயார் நிலையில்தான் மாவோயிஸ்டுகள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. துப்பாக்கி சண்டை நடந்த வனப்பகுதியில் உக்கிரமான அனல் வீசியது. உச்சகட்ட வெயிலில் மாவோயிஸ்டுகள் தாக்குதலை தொடர்ந்து நீடித்துக் கொண்டே இருந்தனர்.

உயிரிழப்பு அதிகம் -காரணம்
இதனால் சகவீரர்களுக்கான உணவு, தண்ணீரை பாதுகாப்பு படையினர் நெடுந்தொலைவு கொண்டு சென்று தர வேண்டியதாக இருந்தது. காயம்பட்ட வீரர்களை உடனடியாக் வனப்பகுதியில் இருந்து மீட்டு சிகிச்சை அளிக்க முடியாத அளவுக்கு மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்திக் கொண்டே இருந்தனர். இதுவும் நமது வீரர்கள் உயிரிழப்பு எண்ணிகை அதிகரிக்க ஒரு காரணம் என்கின்றனர் பாதுகாப்பு படையினர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications