அக்ரிமெண்ட் போட்டுவிட்டோம்.. லடாக் எல்லையில் நடக்கும் எதிர்பாராத மாற்றங்கள்.. மௌனம் கலைத்த சீனா!
லடாக்: லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியாவுடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்து இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து இருக்கிறது. இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் சீனா முதல்முறையாக மௌனம் கலைத்து இருக்கிறது.
இந்தியா சீனா இடையிலான லடாக் எல்லை பிரச்சனை மிக முக்கியமான திருப்பங்களை சந்தித்து வருகிறது. கடந்த வாரம் சனிக்கிழமைதான் லடாக் எல்லை பிரச்சனை குறித்து சீனாவும், இந்தியாவும் பேச்சுவார்த்தை நடத்தியது .
இரண்டு நாட்டை சேர்ந்த ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எல்லை பிரச்சனையை தொடர் பேச்சுவார்த்தை மூலம் அமைதியாக சரி செய்ய இரண்டு நாடுகளும் ஒப்புக்கொண்டு இருக்கிறது.

படைகள் திரும்ப பெறப்பட்டது
இந்த நிலையில் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது. அங்கு மொத்தம் 2 கிமீ தூரத்திற்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. இதனால் அங்கு பதற்றம் தணிய தொடங்கி உள்ளது. இன்னொரு பக்கம் சீனாவின் போர் விமான போக்குவரத்து மற்றும் பயிற்சிகளும் பெரிய அளவில் எல்லையில் குறைந்து உள்ளது.

ஒப்பந்தம்
இந்த நிலையில் லடாக் எல்லை பிரச்சனை குறித்து இந்தியாவுடன் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றை செய்து இருக்கிறோம் என்று சீனா தெரிவித்து இருக்கிறது. இரண்டு நாட்டு ராணுவ அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு பின் சீனா முதல்முறையாக மௌனம் கலைத்து இருக்கிறது. சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹாங் சுங்யிங் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார். அதில், எல்லையில் படைகளை கொஞ்சமாக வாபஸ் வாங்க தொடங்கி இருக்கிறோம்.

இரண்டு நாடு
இது தொடர்பாக இரண்டு நாடுகளும் முக்கியமான ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்து இருக்கிறோம். எல்லையில் பதற்றத்தை குறைக்கும் வகையில் இரண்டு நாடுகளும் படைகளை குறைத்து வருகிறோம். ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தை மற்றும் ராணுவ ரீதியான பேச்சுவார்த்தை மூலம் அமைதிக்கு வழி வகை செய்வோம். லடாக் எல்லையில் கிழக்கு பகுதியில் அமைதியை கொண்டு வர ஒப்பந்தம் செய்து இருக்கிறோம், என்று கூறியுள்ளார்.

ஆனால் நிலைமை
இரண்டு நாடுகளும் இதில் படைகளை வாபஸ் வாங்கி உள்ளதாக சீனா கூறியுள்ளது. ஆனால் லடாக் எல்லையில் இந்தியா படைகளை வாபஸ் வாங்கியதாக தகவல் எதுவும் வெளியாகவில்லை. அதாவது லடாக்கில் இந்தியா படைகளை திரும்ப பெற்றுக்கொண்டதாக் தகவல் எதுவும் வெளியாகவில்லை. சீனா மட்டுமே இப்படி தெரிவித்து வருகிறது. அதேபோல் இரண்டு நாடுகள் இடையே செய்யப்பட்ட அந்த ஒப்பந்தம் என்ன என்றும் சீனா தெரிவிக்கவில்லை.

என்ன ஒப்பந்தம்
அதேபோல் இந்திய தரப்பும் அப்படி எதுவும் ஒப்பந்தம் செய்யப்பட்டதா என்று விளக்கமாக கூறவில்லை. ஒப்பந்தம் என்றால் என்ன மாதிரியான ஒப்பந்தம், எப்படி என்று விவரங்கள் வெளியாகவில்லை. சீனா இது தொடர்பாக எதுவும் முழுமையாக தெரிவிக்கவில்லை. இன்னொரு பக்கம் சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி வருகிறது என்று மட்டும் இந்தியா தகவல் வெளியிட்டு இருக்கிறது. இதனால் எல்லையில் பெரிய அளவில் எதிர்பார்க்காத மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.

என்ன மாற்றம்
அங்கு முழு அமைதிக்கான அறிகுறிகள் தெரிகிறது. இதனால்தான் சீனாவும் படைகளை வாபஸ் பெறுவது குறித்து மௌனம் கலைத்து உள்ளது என்கிறார்கள். ஆனால் கல்வான் பகுதியில் படைகள் குறைக்கப்பட்டாலும் பாங்காங் திசோ பகுதியில் இன்னும் படைகள் உள்ளது. அங்கு இன்னும் சீனா தனது படைகளை திரும்ப பெறவில்லை. அந்த பகுதியில் அமைதி திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications