மேட் இன் இந்தியா.. எல்லைக்கு சென்ற நவீன "துருவ்" ஹெலிகாப்டர்.. லடாக்கில் அவசரமாக தரையிறக்கம்..ஏன்?

இந்தியாவின் தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் ஒன்று லடாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியாவின் தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் ஒன்று லடாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா சீனா இடையிலான மோதல் இப்போது முடிவு அடைய வாய்ப்பு இல்லை என்று கூறுகிறார்கள். லடாக் எல்லை பிரச்சனை தொடர்பாக இந்த பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எல்லையில் முப்படைகள் உடன் ஆலோசனை செய்து வருகிறார் .

கடந்த 15 மற்றும் 16ம் தேதிகளில் லடாக்கில் இருக்கும் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனாவின் எத்தனை வீரர்கள் பலியானார்கள் என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.

படைகள் குவிப்பு

படைகள் குவிப்பு

இந்த நிலையில் இரண்டு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்து வருகிறது. சீனா தொடர்ந்து எல்லையில் படைகளை அதிகமாக்கி வருகிறது. அதிலும் ஹாட்ஸ்பிரிங்ஸ், கல்வான், பாங்காங் திசோ ஆகிய பகுதிகளில் அதிக அளவு படைகளை குவித்து வருகிறது. இதனால் அங்கு போர் வெடிக்க போகிறதா, வேறு ஏதாவது திட்டங்களை இரண்டு நாடுகளும் வகுத்து வருகிறதா என்று கேள்வி எழுந்துள்ளது.

அவசர இறக்கம்

அவசர இறக்கம்

இந்த நிலையில் இந்தியாவின் தயாரிக்கப்பட்ட துருவ் ஹெலிகாப்டர் ஒன்று லடாக்கில் அவசரமாக தரையிறக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2,502 kg எடை கொண்ட இந்த ராணுவ ஹெலிகாப்டர் 280 கிமீ வேகத்தில் சீறிப்பாயும் சக்தி கொண்டது. இந்திய ராணுவத்தில் உள்ள மிக சக்தி வாய்ந்த ஹெலிகாப்டர்களில் இதுவும் ஒன்றாகும் .

மொத்தமாக இறங்கியது

மொத்தமாக இறங்கியது

இந்த நிலையில் லடாக்கில் இந்த ராணுவ ஹெலிகாப்டர் ரோந்து பணிகளை செய்தது. அப்போது ஹெலிகாப்டரில் சிறிய கோளாறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் என்ன மாதிரியான கோளாறு என்று விமானியால் கண்டிபிடிக்கப்படவில்லை. விமானி எதோ சரியாக இல்லை என்பதை மட்டும் உணர்ந்து இருக்கிறார். இதனால் அவசரமாக ஹெலிகாப்டர் கீழே லடாக்கில் இறக்கப்பட்டது.

பாதுகாப்பு காரணம்

பாதுகாப்பு காரணம்

பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த ஹெலிகாப்டர் இறக்கப்பட்டது என்று கூறுகிறார்கள். இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று இன்னும் முழுமையாக கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்திய எல்லையில் தொடர்ந்து நமது விமானப்படை விமானங்கள் ரோந்து பணிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+