எல்லையில் சீன விமானங்கள்.. விமானப்படைக்கு வந்த ரிப்போர்ட்.. லடாக்கில் தொடங்கிய ரோந்து.. பின்னணி!

Subscribe to Oneindia Tamil

லடாக்: லடாக் எல்லையில் இந்திய விமானப்படை தீவிரமாக ரோந்து பணிகளை தற்போது செய்து வருகிறது. முழுக்க ஆயுதங்களுடன் இந்திய விமானப்படை லடாக்கில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்தியா சீனா இடையே லடாக் எல்லையில் தீவிரமாக பதற்றம் நிலவி வருகிறது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்தான் லடாக் எல்லையில் கல்வான் பகுதியில் இரண்டு நாட்டு ராணுவத்திற்கு இடையே மோதல் ஏற்பட்டது.

இந்த சண்டையில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில் லடாக் எல்லையில் இன்னும் அமைதி ஏற்படவில்லை. அங்கு தொடர்ந்து நிலைமை பதற்றமாக உள்ளது.

லடாக் எப்படி

லடாக் எப்படி

இந்த நிலையில் லடாக் எல்லையில் இந்திய விமானப்படை தீவிரமாக ரோந்து பணிகளை தற்போது செய்து வருகிறது. முழுக்க ஆயுதங்களுடன் இந்திய விமானப்படை லடாக்கில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அங்கு சீனாவின் போர் விமானங்கள் அதிகமாக குவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இதை அடுத்து விமானங்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.

அத்துமீறல்

அத்துமீறல்

அதன்படி சீனாவின் விமானங்கள் லடாக்கில் அத்துமீறியதாக தகவல் வந்தது. ஆனால் இதை விமானப்படை மறுத்துள்ளது. அதே சமயம் சீனாவின் விமானப்படை விமானங்கள் எல்லையில் லடாக் அருகே வந்து சென்று இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள். இதனால் அங்கு நிலைமையை கண்காணிக்க ரோந்து பணிகள் செய்யப்படுகிறது.

திபெத் அருகே

திபெத் அருகே

முக்கியமாக திபெத் இந்தியா எல்லை அருகே அதிகமாக இப்படி சீனாவின் விமானங்கள் பறப்பதாக கூறப்படுகிறது . அங்கு மிக அதிக உயரத்தில் சீனாவின் விமானத்தளங்கள் உள்ளது. இங்கிருந்து சீனாவின் விமானங்கள் பறந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் இந்தியாவின் விமானப்படை விமானங்கள் அதிகம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பதற்றமான நிலைமை உள்ளது.

விமானங்கள் என்ன

விமானங்கள் என்ன

இந்தியாவின் மிக் 29 விமானங்கள்தான் அதிகமாக ரோந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் லடாக்கில் இந்தியா அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை களமிறக்கி உள்ளது. அதிரடி தாக்குதல் நடத்த இந்த ஹெலிகாப்டர்கள் உதவும். இன்னொரு பக்கம் லடாக்கில் சின்னுக் ரக ஹெலிகாப்டர்கள் களமிறக்கப்பட்டுள்ளது. அதிக அளவில் வீரர்களை களமிறக்க இது உதவும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+