அந்த ஒரு இடம்.. விடாமல் முரண்டு பிடிக்கும் சீனா.. மீண்டும் களமிறங்கும் இந்தியா.. விரைவில் மீட்டிங்!

Subscribe to Oneindia Tamil

லடாக்: இந்தியா சீனா இடையே லடாக் மோதலில் போதிய முன்னேற்றம் இல்லாத காரணத்தால், தற்போது ஐந்தாம் கட்ட பேச்சவார்த்தையை நடத்த உள்ளனர்.

லடாக்கில் நடக்கும் இந்தியா - சீனா இடையிலான மோதல் இப்போதைக்கு முடிவிற்கு வருவது போல தெரியவில்லை. லடாக்கில் கடந்த மே 5ம் தேதி சீனா அத்துமீறியது. அப்போது தொடங்கிய பிரச்சனை இன்னும் முடியாமல் தொடர்ந்து வருகிறது.

Recommended Video

    பின்வாங்காத China.. பேச்சுவார்த்தை நடத்த India திட்டம்

    லடாக்கில் இருக்கும் பாங்காங் திசோ, கோக்ரா, ஹாட்ஸ்பிரிங்ஸ், டெப்சாங், கல்வான் ஆகிய இடங்களில் சீனா ஆக்கிரமிப்பு செய்தது. இதில் கல்வானில் நடந்த மோதலில்தான் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.

    நிலைமை

    நிலைமை

    இதையடுத்து கடந்த ஜூலை 5ம் தேதி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்கி யி உடன் ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையின் முடிவில் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் வாங்க சீனா ஒப்புக்கொண்டது. இதனால லடாக்கில் மூன்று எல்லை பகுதிகளில் இருந்து சீனா தனது படைகளை வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. அதன்படி டெப்சாங், கல்வான், ஹாட்ஸ்பிரிங்ஸ் ஆகிய பகுதிகளில் இருந்தும் சீனா படைகளை வாபஸ் வாங்கி உள்ளது.

    ஆனால் என்ன

    ஆனால் என்ன

    இங்கு இருந்து மொத்தம் 2 கிமீ பகுதிக்கு சீனா தனது படைகளை வாபஸ் வாங்கி இருக்கிறது. ஆனால் பாங்காங் திசோவின் கட்டுப்பாட்டு பகுதி 4ல் இருந்து சீனா இன்னும் படைகளை வாபஸ் வாங்கவில்லை. அங்கு படைகளை வாபஸ் வாங்கினாலும் இன்னும் முழுமையாக கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறவில்லை. அங்கு சீனாவின் வீரர்கள் 40 ஆயிரம் பேர் வரை இருக்கிறார்கள்.

    ராணுவ பேச்சுவார்த்தை

    ராணுவ பேச்சுவார்த்தை

    இந்த நிலையில் தற்போது இது தொடர்பாக மீண்டும் ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் சார்பாக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இந்த வாரம் இந்த பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இதுவரை 4 முறை ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ள நிலையில், தற்போது ஐந்தாவது முறையாக மீண்டும் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.

    முன்னதாக என்ன நடந்தது

    முன்னதாக என்ன நடந்தது

    முன்னதாக எல்லையில் லடாக் எல்லையில் இருந்து விரைவில் மொத்தமாக படைகளை வாபஸ் பெறுவோம் சீனா இந்தியாவிற்கு வாக்களித்து உள்ளது. இரண்டு நாட்டு வெளியுறவுத்துறை சார்பாக நேற்று முதல்நாள் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த மீட்டிங்கில் இந்தியா சார்பாக நவீன் ஸ்ரீவஸ்தவா கலந்து கொண்டர் .அதேபோல் சீனா சார்பாக ஹாங் லியாங் கலந்து கொண்டார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+