பல்லாயிரம் வீரர்கள்.. ஜெர்மனியிலிருந்து படைகளை இந்தியாவிற்கு "திருப்பும்" அமெரிக்கா.. அதிரடி பிளான்!
லடாக்: சீனாவிற்கு எதிராக இந்தியாவிற்கு படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா தெரிவித்ததற்கு பின் வேறு சில திட்டங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். அமெரிக்கா - ஜெர்மனி இடையிலான மோதலும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
இந்தியா - சீனா - அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகள் தற்போது மிக முக்கியமான திருப்பத்திற்கு காத்து இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். எல்லையில் தொடர்ந்து அத்துமீறி வரும் சீனாவிற்கு எதிராக படைகளை அனுப்புவோம்.
இந்தியா, வியாட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அமெரிக்கா படைகளை அனுப்பும். சீனாவின் அத்துமீறலை அமெரிக்காவின் இந்த படைகள் தடுக்கும் என்று அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்துள்ளது.

காரணம்
ஆனால் அமெரிக்கா - ஜெர்மனி இடையிலான மோதலும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள். இந்தியா உள்ளிட்ட சீனாவிற்கு அருகே இருக்கும் நாடுகளுக்கு அமெரிக்கா 30 ஆயிரம் வீரர்கள் வரை அனுப்பும் என்று கூறுகிறார்கள். ஆம் 30 ஆயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட வீரர்கள் சீனாவிற்கு எதிராக இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் களமிறக்கப்படுகிறார்கள். இதற்கு பின் நிறைய பொருளாதார ரீதியான காரணங்களும் இருக்கிறது.

எங்கே இருந்து வந்தார்
இந்த 30 ஆயிரம் வீரர்கள் திடீர் என்று எங்கே இருந்து வந்தனர் என்று கேள்வி எழ வாய்ப்புள்ளது. இவர்கள் எல்லோரும் ஜெர்மனியில் நேட்டோ குழுவில் அமெரிக்கா சார்பாக பாதுகாப்பு பணிகளை செய்து வந்தனர். நேட்டோ படையில் ஒன்றாக ஜெர்மனியும் மற்ற ஐரோப்பா நாடுகளும், அமெரிக்காவும் இருக்கிறது. இதில் நேட்டோ சார்பாக 52 ஆயிரம் வீரர்கள் ஜெர்மனியில் பாதுகாப்பு பணிகளை செய்து வருகிறார்கள்.

ரஷ்யா எதிர்ப்பு
ஜெர்மனியில் ரஷ்யாவின் அத்துமீறலை தடுக்கும் பொருட்டு இந்த படைகளை அமெரிக்கா குவித்தது. ஆனால் தற்போது இந்த படைகளை அமெரிக்கா வாபஸ் வாங்க தொடங்கி உள்ளது. நேட்டோ படைகளுக்கு ஜெர்மனி சரியாக பங்காற்றவில்லை. ஜெர்மனி நேட்டோவிற்கு போதிய நிதி அளிக்கவில்லை. அமெரிக்காவின் பாதுகாப்பில் ஜெர்மனி குளிர் காய்கிறது.

நேட்டோ மரியாதை
போலந்து போன்ற சின்ன நாடுகள் கூட அமெரிக்காவிற்கு காசு கொடுக்க தயாராக இருக்கிறது. ஆனால் ஜெர்மனி எங்களிடம் பாதுகாப்பை பெற்றுக்கொண்டு அதற்கு ஏற்ற காசை கொடுப்பது கிடையாது, என்று டிரம்ப் கூறியுள்ளார். அதேபோல் இவர் ஐரோப்பாவில் இருக்கும் வேறு சில நாடுகள் மீதும் கடுமையான கோபத்தில் இருக்கிறார். இதனால்தான் அங்கிருந்து படைகளை திரும்ப பெறுகிறார்.

எங்கே செல்வார்கள்
ஜெர்மனியில் மொத்தம் அமெரிக்காவின் 52 ஆயிரம் வீரர்களில் தற்போது 31 ஆயிரம் வீரர்கள் திரும்ப பெறப்பட்டுவிட்டனர். இந்த 31ஆயிரம் வீரர்களில் சிலர் போலந்து செல்கிறார்கள். போலந்து கொடுக்கும் அதிக காசு காரணமாக அங்கே அமெரிக்கா பாதுகாப்பிற்காக படைகளை அனுப்புகிறது. போலந்து - அமெரிக்கா இனி கூட்டு ராணுவ பயிற்சிகளை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கு எத்தனை
அதேபோல் வேறுசில ஐரோப்பா நாடுகளிடம் இருந்தும் அமெரிக்கா படைகளை வாபஸ் பெற உள்ளது. இதற்கான செயலில் அமெரிக்கா இறங்கி உள்ளது. இந்த படைகளையும் அமெரிக்கா இந்தியாவை மற்றும் ஆசியாவை நோக்கி திருப்பும். இதனால் ஜெர்மனியில் இருந்து 20 ஆயிரம் வீரர்கள் உட்பட ஏறக்குறைய 30 ஆயிரம் வீரர்கள் சீனாவை கட்டுப்படுத்துவதற்காக ஆசியாவிற்கு வர வாய்ப்புள்ளது.
-
"அலறிய அபாய சைரன்.." நடுக்கடலில் தத்தளிக்கும் இந்தியர்கள்.. கப்பல் மீது பாய்ந்த ஏவுகணை.. பதற்றம் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியா கூட்டணியில் மிஸ்ஸான விஜய் கட்சி.. காங்கிரஸ் ஒன்னு சொல்ல.. திருமா வேற சொல்ல..! பெரிய குழப்பம் -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி












Click it and Unblock the Notifications