நீண்டகாலமாக சீனா குறிவைத்திருக்கும் அருணாச்சல பிரதேச எல்லையின் ஜெமிதாங் சர்க்கிள்

Subscribe to Oneindia Tamil

இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையின் ஜெமிதாங் பள்ளத்தாக்கு பகுதியை சீனா திடீரென ஆக்கிரமிப்பதும் பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பால் அங்கிருந்து பின்வாங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கிறது சீனா. இதனால்தான் அப்பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.

லடாக் எல்லையில் சீனா ஊடுருவல், ஆக்கிரமிப்பு முயற்சிகளில் தீவிரம் காட்டுகிறது. இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்து வருகிறது.

இதனையடுத்து சிக்கிம், பூட்டான், அருணாச்சல பிரதேச எல்லைகளிலும் சீனா வாலாட்ட முனைகிறது. அருணாச்சல பிரதேசத்தில் 5 இந்தியர்களை கடத்திச் சென்றது சீனா ராணுவம்.

இந்தியர்களை கடத்திய சீனா

இந்தியர்களை கடத்திய சீனா

இது தொடர்பாக இந்திய ராணுவ அதிகாரிகள் கேள்வி எழுப்பியதற்கு, அருணாச்சல பிரதேசம் எங்களது நிலப்பகுதி; தெற்கு திபெத்; எங்கள் நாட்டு குடிமகன்களை நாங்கள் ஏன் கைது செய்யப் போகிறோம்? என சவடால் பேசியது. தற்போது இந்தியாவின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து 5 இந்தியர்களும் தங்களது பகுதியில் இருப்பதாக கூறியிருக்கிறது சீனா.

இந்தியர்கள் விடுவிப்பு எப்போது?

இந்தியர்கள் விடுவிப்பு எப்போது?

அருணாச்சல எல்லைக்குள் சீனா ஊடுருவி அண்மையில் இந்தியர் ஒருவரை கைது செய்தது. 19 நாட்களாக தங்களது கட்டுப்பாட்டில் வைத்துவிட்டு பின்னர்தான் சீனா அந்த இந்தியரை விடுதலை செய்தது. தற்போதும் சீனாவின் பிடியில் இருந்து இந்தியர்கள் எப்போது விடுதலையாவார்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

கிராம மக்கள் வெளியேற்றம்

கிராம மக்கள் வெளியேற்றம்

இதனால் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் சீனா எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதனைத் தொடர்ந்து எல்லை கிராம மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. தவாங் மாவட்டத்தின் ஜெமிதாங் சர்க்கிளில் இருந்து 30கி.மீ தொலைவில் உள்ள தக்சாங் கிராம மக்கள் பாதுகாப்பு கருதி அங்கிருந்து வெளியேறி உள்ளனராம்.

அடிக்கடி ஆக்கிரமிக்கும் சீனா

அடிக்கடி ஆக்கிரமிக்கும் சீனா

இந்த எல்லைப் பகுதிகளை ஆக்கிரமித்துக் கொள்வதும் பின்னர் இந்தியாவின் எதிர்ப்புக்கு பணிந்து அங்கிருந்து வெளியேறுவதையும் பல ஆண்டுகளாக சீனா வாடிக்கையாக வைத்திருக்கிறது. 1986-ம் ஆண்டிலும் இதேபோன்ற நிலை அப்பகுதிக்கு ஏற்பட்டது. தற்போது நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதால் இப்பகுதி மக்கள் அங்கிருந்து பாதுகாப்புக்காக வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+