அஸ்ஸாம், திரிபுரா போராட்டங்களில் பெரும் வன்முறை- கண்ணீர்புகை வீச்சு- ராணுவம் குவிப்பு
Recommended Video
குவஹாத்தி/ அகர்தலா: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாம், திரிபுராவில் நடைபெறும் போராட்டங்களில் வன்முறை வெடித்துள்ளன. இதனால் போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். பல இடங்களில் பெருமளவு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த மசோதா வடகிழக்கு மாநிலங்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம், திரிபுரா மாநிலங்களில் இம்மசோதாவுக்கு எதிராக தொடர் மறியல் போராட்டங்கள், முழு அடைப்பு நடைபெற்று வருகின்றன.

அஸ்ஸாம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் வங்காளிகள், வட இந்தியர்களின் குடியேற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தங்களது தாய்நிலத்தின் பெரும்பகுதியை இவர்கள் ஆக்கிரமித்துவிட்டனர்; எஞ்சிய நிலப்பரப்பும் பறிபோகும் என்கிற அச்சத்தின் காரணமாக போராட்டங்கள் நடைபெறுகின்றன.
குவஹாத்தியில் ஆளுநர் மாளிகை, தலைமை செயலக்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தின் போது வாகன போக்குவரத்தை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினர்.
இதனால் பல இடங்களில் போலீசாருடன் மோதல் வெடித்தது, போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன. தற்போது ஜம்மு காஷ்மீரில் இருந்து கூடுதல் துணை ராணுவப்படையினர் அஸ்ஸாமுக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
திரிபுராவில் வர்த்தக நிறுவனங்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. பொதுசந்தைகள் சூறையாடப்பட்டன. மேலும் போலீசாருடன் மோதல்கள் ஏற்பட்டன.


Click it and Unblock the Notifications
