எப்படி இறந்தார் சுனந்தா என்றே தெரியவில்லை.. டெல்லி போலீஸ் தகவல்
டெல்லி: சுனந்தா மர்ம மரணத்தில் துப்பு ஏதும் கிடைக்கவில்லை என்று டெல்லி போலீஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூர் (58), ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுனந்தா புஷ்கரை (52) கடந்த 2010ம் ஆண்டு, காதல் திருமணம் செய்தார்.
கடந்த 2014-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் சுனந்தா புஷ்கர் இறந்து கிடந்தார். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.

விஷம்
சுனந்தாவின் மரணம் இயற்கை மரணம் அல்ல என்றும், விஷத்தால் நிகழ்ந்தது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றிய டெல்லி போலீஸார், சசி தரூர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினர்.

அறிக்கை தாக்கல்
இதுதொடர்பான ஒரு வழக்கு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சிஸ்டானி மற்றும் சந்தர் சேகர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சுனந்தா மரணம் குறித்து 3 தினங்களுக்குள் அறிக்கையை தாக்கல் செய்யுமாறு டெல்லி போலீஸாருக்கு உத்தரவிட்டனர்.

எஃப்ஐஆர் பதிவு...
இந்த வழக்கு குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சனிக்கிழமை தாக்கல் செய்த மனுவில், சுனந்தா புஷ்கரின் மரண விவகாரத்தில் எஃப்ஐஆர் பதிவிட்டும் எந்தவித பயனும் இல்லாததால் இந்த வழக்கை வேறு புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த வழக்கில் சசிதரூர் பொய் கூறுகிறார். அவருக்கு எதிரான ஆதாரங்களை அழித்துவிட்டார் என்றார்.

நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிப்பு
அப்போது டெல்லி போலீஸ் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் ராகுல் மெர்ஹா, அவரிடம் தாக்கல் செய்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். அதில் சுனந்தாவின் மரணத்துக்கான காரணம் தெரியவில்லை என்றுள்ளது. இதனிடையே தன்னையும் இந்த வழக்கில் வாதியாக இணைக்க வேண்டும் என்று சுனந்தாவின் மகன் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications